search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "கடலூர்"

  • கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன.
  • தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.

  இன்றைய காலகட்டத்தில் நிலவுக்கு சென்று வரும் நிலைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகார மேடு கிராமம், வளர்ச்சியின்றி பின்தங்கியுள்ளதாக குமுறுகின்றனர் ஊர் மக்கள்.

  கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன. கிராம மக்கள் சொல்லும் சொல் கேட்டால் எங்கள் கிராமத்தில் வாழ எங்களுக்கு உகந்த இடமில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.


  காரணம் என்னவென்றால், குடிக்க நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு மற்ற கிராமங்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாய விலைக்கடை கூட இல்லை என குமுறல் சத்தம் அதிகாரிகளுக்கு கேட்காமல், அங்குள்ள மக்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

  எனவே தொழில்நுட்ப ரீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில்.. தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக சின்னக்காரமேடு கிராம மக்கள் புலம்புகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் என்பதால் பெண் தரக்கூட தயங்குவதாக நொந்துபோய் உள்ளனர் சின்னகார மேடு கிராம மக்கள்.  • ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி.
  • கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது.

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது, தெற்கு பிச்சாவரம். இது சுரபுன்னை மரங்களும், தில்லை மரங்களும், அடர்ந்து காணப்படும் ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி. பிச்சாவரம் கடல் பகுதி வழியாக இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்து வந்தனர், ஆங்கிலேயர்கள் ஒரு முறை பேஸ்பரங்கி என்ற ஆங்கிலேயர், வணிகம் செய்வதற்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கிச் சென்றார்.

  பிச்சாவரம் கடற்கரையை கடக்கும் பொழுது கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது. 'இந்த வணிகம் நடைபெறவில்லை என்றால் தனக்கு வாழ்க்கையே கிடையாது'என்று வேதனைப்பட்ட அந்த ஆங்கிலேயர், இருள் சூழ்ந்த வேளையில் தில்லை நடராஜர் ஆலயம் இருக்கும் திசையான மேற்கு நோக்கி, 'யாராவது காப்பாற்றுங்கள். நான் சரக்கு கொண்டு வந்த கப்பல் தரை தட்டி விட்டது. இந்த கப்பலை மீட்க முடியவில்லை என்றால், நான் வாழ்க்கையை இழந்தவன் ஆகிவிடுவேன்' என்று கதறி அழுதார்.

  அப்பொழுது இருளில் ஒரு ஒளி தெரிந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளி வந்த திசையை பார்த்தபோது, அது நடந்து செல்லும் வகையில் மணல் பரப்பாக இருந்தது. அந்த மணல் பரப்பில் இறங்கி நடந்தபோது, ஓரிடத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன், ஆங்கிலேயரிடம் "உங்கள் கப்பலை நீங்கள் மீட்டெடுத்து செல்லலாம். அதற்கு என் அருள் உண்டு. ஆனால் நீங்கள் வணிகம் செய்து விட்டு வரும் பொழுது, எனக்கு இங்கு ஒரு ஆலயம் கட்டி விட்டுச் செல்லுங்கள்" என்றான்.

  உடனே அந்த ஆங்கிலேயர், "நிச்சயமாக என் கப்பல் மீண்டு, நான் நல்லபடியாக வணிகத்தை முடித்தவுடன், இங்கே ஒரு ஆலயத்தைக் கட்டி விட்டுத்தான் என்னுடைய சொந்த நாடு திரும்புவேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். மறுநிமிடமே அந்தச் சிறுவன் மறைய, ஆங்கிலேயேருக்கு வந்த சிறுவன் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது.

  அவர் மீண்டும் கப்பலுக்கு திரும்பியபோது, தரை தட்டிய கப்பல் சற்றே நகர்ந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர் ஆச்சரியம் அடைந்தார். அவர் மகிழ்ச்சியில் வணிகம் செய்யும் நாட்டுக்கு கப்பலை செலுத்தினார். அங்கே எதிர்பார்த்ததை விட, வணிகம் மிகவும் நல்லபடியாக நடந்தது. கூடுதல் லாபத்தையும் பெற்றுத்தந்தது. வணிகம் செய்து கிடைத்த லாபத் தொகையில், அங்கேயே கோவில் கட்டுவதற்கு தேவையான, கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கப்பலில் திரும்பினார்.

  தெற்கு பிச்சாவரம் வந்த அவர், அந்த ஊர் மக்களிடம் தனக்கு நடந்து பற்றி கூறினார். அதைக் கேட்டதும் அந்த ஊர் மக்கள் ஆச்சரியம் அடைந்து, 'ஆகாச சாஸ்தா எனப்படும் அய்யனார்தான் உங்களுக்கு உதவி செய்து இருக்கிறார். அவரின் விருப்பப்படியே நீங்கள் ஆலயம் கட்ட முடிவு செய்தால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்' என்றனர்.

  உடனடியாக அந்த பகுதியில் ஆங்கிலேயர் கோவில் கட்டத் தொடங்கினார். அப்பொழுது அவரது கனவில் வந்த அய்யனார், "நான் இங்கு இந்த ஊரை காவல் காத்து வருகிறேன். எனக்கு காவலாய் என்னோடு இருக்கும் செம்பருப்புக்கும், என் ஆலயத்திற்கு முன்னால் ஒரு சன்னிதி அமைத்து விடுங்கள். எங்கள் இருவருக்குமே உருவம் வேண்டாம். நாங்கள் அரூபமாகவே அருள்பாலிப்போம்' என்று கூறினாராம்.

  அவர் கூறியது போலவே ஆலயத்தைக் கட்டி முடித்தார், ஆங்கிலேயர். சிறுவனாக வந்து உதவியதால், அய்யனாரை 'குட்டியாண்டவர்' என்று பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். அதுவே அய்யனாரின் திருநாமமாக இன்றும் உள்ளது. கோவில் கட்டி முடித்து விட்டு அந்த ஆங்கிலேயர் இத்தல சாஸ்தாவை வணங்கியபோது, ஒரு அசரீரி ஒலித்தது. அந்தக் குரல், 'கோவில் கட்டியது போக, எத்தனை கருங்கற்கள் மீதி இருந்தாலும் அதை உன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடு. இங்கே வைக்காதே' என்று கூறியதாம். 'எதற்காக அப்படிச் சொல்கிறார், சாஸ்தா' என்பது புரியாமல், மீதமிருந்த கருங்கற்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார், ஆங்கிலேயர். அவது சொந்த ஊருக்கு திரும்பியபோது, அந்த கருங்கற்கள் அனைத்தும் தங்கமாக மாறியிருந்ததாம்.

  குட்டியாண்டவர் கோவில் கருவறையில், கருங்கல் சுவரில் மூன்று அணிகள் மட்டுமே இருக்கும். அவைகளுக்கு தான் எல்லா விதமான பூஜைகளும் செய்யப்படுகிறது. கோவிலின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் முதலில் காணப்படுவது அணிவகுத்து நிற்கும் யானைகள், குதிரைகள். அதன் எதிரே அய்யனாரின் காவலரான செம்பருப்பு சன்னிதி உள்ளது. இவருக்கு உருவம் கிடையாது. கருவறையில் வேல்கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. அதை வணங்கி விட்டு நேராக சென்றால், மகாமண்டபத்தில் பலிபீடம், மூன்று யானைகள் காணப்படுகின்றன. அதைக் கடந்து அர்த்த மண்டபம் சென்றால் துவார பாலகர்கள் கம்பீரமாக நிற்க உள்ளே, குட்டியாண்டவர் அரூபமாக தரிசனம் தருகிறார்.

  இங்கு கருவறையில் குட்டியாண்டவர் அரூபமாக இருப்பதால் பூரண - புஷ்கலா இருவரும், குட்டியாண்டவர் சன்னிதிக்கு வலது பக்கம் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். அய்யனார் எல்லாத் தலங்களிலும் பூரண புஷ்கலாவோடுதான் காட்சி தருவார். ஆனால் இவ்வாலயத்தில் அவர்கள் தனித் தனியாக காட்சி தருவது சிறப்பம்சமாகும். இக்கோவிலை சுற்றிலும் வலது பக்கம் விநாயகர், காசியம்மன், கருப்புசாமி, ராகு- கேது, விநாயகர், பாவாடைராயன் முனீஸ் வரன், சங்கிலிவீரன், அக்னிவீரன் சன்னிதிகளும் உள்ளது.

  கடற்கரையை ஒட்டிய கோவில் என்பதால், இங்கு மீனவர்கள் குல தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள். தாங்கள் தொழிலுக்கு செல்லும் முன் இங்கு வந்து வணங்கி விட்டுச் செல்வதால் தங்கள் தொழில் சிறப்பாக நடப்பதாகவும், அதனால் அதிக அளவில் லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இக்கோவிலைச் சுற்றிலும் எல்லாவிதமான காவல் தெய்வங்களும் இருப்பதால், இங்கு குலதெய்வ வழிபாடுகள் தினந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

  இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கோவிலை ஐந்து முறை சுற்றி வந்து வணங்கினால் திரு மணத்தடை, பிள்ளைப்பேறு, கடன்களால் அவதி என அனைத்து பிரச்சினைகளும் தீரும். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

  அமைவிடம்

  சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் பேருந்தில் சென்றால், தெற்கு பிச்சாவரத்தில் இறங்க வேண்டும். அங்கே கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது, இந்த ஆலயம்.

  • 20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.
  • வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

  ஸ்தல வரலாறு

  கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது.

  20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.

  13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.

  பெருமாள் கடலில் குளித்து விட்டு அந்த குன்றின் மீது வந்து அமர்ந்ததாகவும் அப்போது தனது வலது கையில் உள்ள சக்கரத்தை அங்கு வைத்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது.

  இதையடுத்து சக்கரத்தாழ்வார் கோவில் சுயயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.

  தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது.

  கோவிலில் உள்ள சக்கரம் 3 அடி உயரம் உள்ளது.

  இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 1 அடி உயரம் மட்டுமே இருந்தாகவும் அது தானாக வளர்ந்து இப்போது இந்த உயரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

  கோவிலில் சித்திரை வருட பிறப்பின் போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

  ஆனி மாதத்தில் சுதர்சன ஜெயந்தியும், சிறப்பு யாகமும் நடக்கின்றன.

  புரட்டாசி 3-ம் சனிக்கிழமை கருட வாகனசேவை மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

  தைமாதம் 3-ம் வெள்ளி, 5-ம் வெள்ளி கிழமைகளில் அரசு-வேம்பு திருக்கலயாணம் நிகழ்ச்சியும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

  இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் வழிபடும் போது ஒவ்வோரு விசேஷ பலன் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

  செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இடப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும், வியாழக்கிழமை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும், கல்வி யோகமும் கிடைக்கும்.

  வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

  குழந்தை இல்லாதவர்களும், திருமணதடை உள்ளவர்களும் வெள்ளிக்கிழமை வழிபட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

  பில்லிசூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை வழிபட்டால் அவர்கள் பிரச்சினை தீரும்.

  • பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
  • 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.

  1. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்திக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று ரதோஸ்வம் நடைபெறுகிறது.

  2. பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.

  3. கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. புதுவை மாநிலம், தமிழ்நாடு மாநிலம் இவர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.

  4. 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது.

  5. ஸ்ரீ ராஜ ராஜசோழன், விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர்களாலும் சில கைகங்கர்யங்கள் செய்யப்பட்டுள்ளன.

  6. இந்த கோவிலுக்கு பின்புறம் ஸ்ரீமத் அகோபில மடம் 4-வது பட்டம் ஸ்ரீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது.

  • இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
  • இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

  இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.

  இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தி இந்தியாவிலேயே உள்ள ஒரு ஒருவர் தான் என்பது தனிச்சிறப்பு

  தவிர இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பது விசேஷமான அம்சம்.

  இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

  முக்கியமாக நவக்கிரக தோஷங்கள் போகும்.

  சுவாதி நட்சத்திரத்திலும், பிரதோஷத்திலும் மற்றும் செவ்வாய்க் கிழமையில் இந்த மூர்த்தியை (ஸ்ரீ லட்சுமி நரசிம்மனை) தரிசித்தால் மிகவும் நல்லது.

  எல்லா குறைகளும் தீரும்.

  சிங்கிரிகோவில், பூவரங்குப்பம், பரிக்கல் ஆகிய ஊர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால் இந்த மூன்று நரசிம்மனை

  ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும்.

  • இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
  • இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

  இதுவரை தலபுராணத்தை பற்றி பார்த்தோம்.

  இந்த ஆலயத்துள் துண்டு கல்வெட்டுகள் உள்ளன.

  இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.

  இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

  ராஜ கோபுரவாயிலில், 16-ம் நூற்றாண்டை சேர்ந்து எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்து இருக்கிறது.

  இப்பாடல் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்த வடிவில் அமைந்துள்ளது.

  • ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.
  • இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

  சன்னதிக்கு எதிரில் இருக்கும் விநாயகரை எடுத்து கோபுர நுழைவாயிலுக்கு பக்கத்தில் வைக்க எண்ணி ஒரு கோவில்

  அமைத்து விநாயகரை எடுத்ததும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதால் பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக பரம்பரை வரலாறு உள்ளது.

  ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.

  பிரெஞ்சுக்காரர்களும் சுவாமிக்கு திருவாரணங்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

  புராணம், சரித்திரம் ஆகிய இரு வகைகளிலும் சிறப்புடையதும் இந்தியாவிலேயே அபூர்வமானதுமான

  ஸ்ரீ நரசிம்மர் சன்னதி உள்ள தலம் சிங்கிரிகுடி என்பதை இதுவரை கண்டோம்.

  இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

  இந்த ஊரில் கல்வி கேள்விகளில் வல்ல பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.

  மூலஸ்தானம் மட்டும் தான் பழமையானது.

  தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி இவைகள் பிற்காலத்தவையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  திருவந்திரபுரம், ஸ்ரீ தேவனாதப்பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனையின் நிமித்தமாக ஹிரண்ய சம்கார

  நரசிம்மனாக பிரகலாதனுக்கு சேவை சாதித்தருளினார்.

  • ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
  • இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

  இந்தியாவிலேயே அபூர்வமாக இரண்டு இடங்களில் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

  அந்த இரு சேத்திரங்களுள் ஒன்று சிங்கர்கோவில் மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது.

  மூர்த்தியின் கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:

  பதாகஸ்தம், ப்ரயோக சக்ரம், ஷீரிகை என்னும் குத்துக்கத்தி, பாணம், ராட்சனின் தலையை அறுத்தல், கத்தியால் அசூரன் ஒருவனைக் கொல்லுதல், இரணியனின் கைகளில், குடல் மாலையைப் பிடித்திருப்பது, சங்கம், வில், கதை, கேடயம்,வெட்டப்பட்ட தலை, இரணியனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது.

  மூலாயத்தில் பெரிய வடிவில் பதினாறு கைகளுடன் இரணியனைச் சங்கரிப்பவராகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

  கீழே இடப்புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலப்புறம் மூன்று அசூரர்கள், பிரகலாதர்,

  சுக்கிரர் வஷிட்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

  வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள்.

  ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.

  இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

  திரு.ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் நரசிம்ம சுவாமிக்கு

  அவிசுப்பாக்கத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

  • இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
  • இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

  சிங்கிரிகுடி (சிங்கர்கோவில்) என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேஷத்திரத்தின் தலவரலாறு கூறும் இச்சிறு நூல்

  சிங்கர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் அடியோங்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.

  இத்திருத்தலம் இக்காலம் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டத்துள் இருக்கிறது.

  சிங்கர்கோவில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது.

  இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.

  இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

  வசிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரைத் தியானம் செய்து கொண்டு தவம் புரிந்து சித்தி பெற்றுத்

  தம்முடைய பாவங்களைப் போக்கி கொண்டார்.

  இவ்வூரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் கூறலாம்.

  ஊர் பெயர்: சிங்கர்கோவில்

  புராணப்பெயர்: கிருஷ்ணாரண்யசேத்ரம்

  சுவாமி பெயர்: லட்சுமி நரசிம்மர்

  தாயார் பெயர்: கனகவல்லித்தாயார்

  விமானத்தின் பெயர்: பாவன விமானம்

  தீர்த்தங்கள் ஐந்து: ஜமதக்னி தீர்த்தம்,

  இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்,

  வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்.

  • இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
  • முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

  திருமண தடை நீக்கும் முத்துக்குமாரசாமி கோவில்!

  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.

  முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

  ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.

  சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையொட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது.

  முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது.

  இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

  மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்புபலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது.

  பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

  இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி,பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.

  கந்தசஷ்டி விழாவின் போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

  தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார்.

  இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.

  இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது.

  தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.