search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான  7 பேர் குடும்பத்துக்கு  பிரேமலதா  ஆறுதல்
    X

    கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியானவர் குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேர் குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல்

    • ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
    • அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர்.

    கடலூர்:

    கடலூர்அருகே ஏ. குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த கடலூர் மாவட்டத்துக்கு வந்தார்.முதல் கட்டமாக அயன் குறிஞ்சிப்பாடிக்கு சென்று அவர் ஆறுதல் கூறினார். அதன்பினனர் ஏ.குச்சிபாளையத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்கள்பிரேமலதா கண்ணீருடன் தங்களது குடும்ப நிலவரங்களை தெரிவித்தனர். பின்னர் பிரேமலதா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் சிவகொழுந்து, அவைதலைவர் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், நகர செயலாளர்கள் சரவணன், கஜேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.

    Next Story
    ×