search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி பூஜை"

    • ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொப்பகரை ஊராட்சி ஆர்.குட்டூர் கிராமத்திற்க்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

    இதில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் முருகன், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னால் தலைவர் புருசப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் சபரிசீனிவாசன், அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், துணை செயலாளர் முனுசாமி, சாந்தகுமார், ராஜா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான கிராம இணைப்பு சாலை கோரிக்கைக்கு தற்பொழுது ரூ.2.29 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை இருந்தது.

    தற்பொழுது விவசாயம் மற்றும் ஜவுளி பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல சிறு பாலங்கள் கட்டுவதற்கும் இத்திட்டப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 2½ கி.மீ. தொலைவிற்கு 5 பாலங்களுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, திம்மரச நாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்க்ஷயா தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறி யானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் நடைபெறும் அகலங்கன்னு பாலத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளரிடம் கூறிய கலெக்டர் இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.
    • கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்திநகரில், ரூ.32.18 லட்சம், காந்தி நகரில், 6.64 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க திட்டத்தில் தார்சாலை, மற்றும் மிட்டஹள்ளி புதூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகில், 15-வது நிதிக்குழு மானியத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.

    கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ஒன்றியகுழு துணை தலைவர் சசிகலா தசரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், அம்மு பழனி, பார்வதி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் முதல் மலைசந்து வரையில், 8 கி.மீ., அளவில் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பரம நகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வடக்குப்பட்டி பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை சூற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். அப்போது பரமநகர் பள்ளியில் குழந்தைகள் அமைச்சரை பார்த்ததும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனை பார்த்ததும் நேராக குழந்தைகளிடம் சென்ற அமைச்சர் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுக்கு வகுப்பறை கட்டுவது யார் தெரியுமா என்று கேட்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்ற மாணவன் தனது மழலை மொழியில் மெய்யநாதன் என்று கூறினார்.

    இதை கேட்டதும் அமைச்சரும் அங்கிருந்த அதிகாரிகளும் சிரித்து மகிழ்ந்தனர். பூமி பூஜை நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி,கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி,கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், ஆலங்குடி நகர துணைச் செயலாளர் செங்கோல் , வடகாடு ஊராட்சித் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தலையணை ஆற்றுப்படுகையில் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அடிக்கல்

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வாசு. யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி வாசன், மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், வாசு. யூனியன் வட்டார வள ர்ச்சி அலுவலகர்கள் கணே சன், ரவிச் சந்திரன், துணை சேர்மன் சந்திர மோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் பிரதீபன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய ராமன், விஜய பாண்டியன், உதவி பொறி யாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், தமிழர் விடுதலை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் சாமி, டி.டி.வி. ஹைடெக் சேம்பர் பிரிக்ஸ் பிரேம்குமார், ஜெய விநாயகா புளு மெட்டல்ஸ் ஸ்ரீகாந்த் பாலாஜி, கவுன்சி லர்கள் கார்த்திகேயன், முருகே சன், வள்ளியம்மாள், மகேஸ்வரி, அப்பாஸ், சிப்பி ராள், ருக்குமணி, பாக்கிய லட்சுமி, ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லதா நன்றி கூறினார்.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை பணி தொடக்க விழா நடந்தது.
    • பி.சி.ஆர் மனோகரன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்தும் கழிவறை சேதம் அடைந்த நிலையில் புதிய கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை கட்ட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதிய கழிவறை பணி தொடக்க விழா நடந்தது.

    இதில் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆயிஷா, துணை சேர்மன் சீனிவாசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதப்பன், சதீஷ்குமார், சக்திரமேஷ், பிரியா, இந்திராணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சப்பாணிப்பட்டி சாலையில் இருந்து சுமார் 900.10 மீட்டர் அளவில் ரூ.28.27 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.
    • பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தீபா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அடிலம் ஊராட்சி சவுளூக்கொட்டாய் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சப்பாணிப்பட்டி சாலையில் இருந்து சுமார் 900.10 மீட்டர் அளவில் ரூ.28.27 லட்சம் மதிப்பிலான மண் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தீபா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணைத் தலைவர் ராணி நாகராஜ், ஊராட்சி நிர்வாகி சிங்காரவேல், செந்தில்குமார், பன்னீர், வேணுகோபால், மாணிக்கம், மணிகண்டன், கோவிந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.15.5 லட்சம் மதிப்பில் அமைகிறது
    • கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வாங்கூர் ஊராட்சி, வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

    வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேநீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் வாங்கூர் கிராமம், நத்தம் பேட்டையில் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.7.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழாவும் நடந்தது.

    • எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாக பணிகள் நடைபெற உள்ளது.
    • பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில், 15-வது பொது நிதிக்குழு மானிய திட்ட நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சபரி நகரில் கான்கிரீட் சாலை அமைத்தல், எம். ஏ. நகரில் புதிய தார் சாலை அமைத்தல், அய்யாவு நகரில் கப்பி சாலை அமைத்தல், மீனாம்பாறை மயான சாலை, அவரப்பாளையும் இணைப்பு சாலை, உதயம் நகரில் கழிவு நீர் கால்வாய், எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாகம், உள்ளிட்ட பணிகள் ரூ.1.66 கோடியில் நடைபெற உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×