search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார் சாலை"

    • பூமி பூஜை போடப்பட்டது
    • ரூ.4.75 கோடி ஒதுக்கீடு

    வந்தவாசி:

    வந்தவாசி நகரின் பிரதான சாலையான பஜார் வீதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.4.75 கோடி செலவில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பூமிபூஜை மற்றும் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை, மழைநீர் வடிகால்வாய், 3 சிறுபாலங்கள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    • கடத்தூர்-பொம்மிடி சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு.

    தருமபுரி மாவட்டம், கடத்தூர்-பொம்மிடி சாலையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணிகள் செய்து வருகின்றனர். அப்போது இச்சாலை இருபுறங்களிலும் வாக னங்களின் கூட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இதயைடுத்து ஆக்கிர மைப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தருமபுரி கடத்தூர் சாலையில் புதிய தார்ரோடு அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

    இதில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தரமாக வேலைகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெடுஞ்சாலை துறையினர் பலர் உடனிருந்தனர்.

    • சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
    • சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்கம்பத்தை சாலையோரம் மறு நடவு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பங்களில் உரசும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவிளை அம்மன் கோவில் மேலத் தெரு பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் கான்கிரீட் தளம், 32-வது வார்டு சைமன் நகரில் ரூ.51 லட்சத்தில் தார் சாலை, 33-வது வார்டு கம்பர் தெருவில் ரூ.5.81 லட்சத்தில் கான்கிரீட் தளம், 50-வது வார்டு வெள்ளாரன்விளையில் ரூ.27 லட்சத்தில் கான்கிரீட் தளம், 41-வது வார்டு வட்டவிளை, சானல் கரை பகுதியில் ரூ.1.80 லட்சத்தில் மழைநீர் வடிகால் ஓடை பக்க சுவர், 40-வது வார்டு பைத்துமால் நகரில் ரூ.7.50 லட்சத்தில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க செயற்குழு உறுப்பினர் சாதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிகள் பெயர்ந்த கரடுமுரடான சாலையில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
    • பல நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது அதிர்வில் வழியிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படு கிறது.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனி கோட்டை, பெட்ட முகிலாளம், அஞ்செட்டி, உரிகம், கோட்டையூர், கெம்பங்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளன.

    இக்கிராமங்களில் சாலை வசதி, கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    இந்நிலையில், அஞ்செட்டி அருகே கோட்டையூர், மலையூர் மலைக் கிராமத்தைச் சுற்றி லும் பல்வேறு கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிக்கு கோட்டையூர் வந்து அங்கிருந்து அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிக்குச் செல்ல வேண்டும்.

    இதனால், கோட்டையூர்-மலையூர் இடையிலான 4 கிமீ தூரம் சாலை இப்பகுதி மக்களுக்குப் பிரதானமாக உள்ளது. கோட்டையூர் வரை மட்டுமே பேருந்து வசதிகள் உள்ளன. இதனால், மலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கோட்டையூர் வரை இருசக்கர வாகனம் அல்லது சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது.

    குறிப்பாக இப்பகுதியில் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளதால், விளை பொருட்களைச் சந்தைப்படுத்த வெளியூர்களுக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில், கோட்டையூர்-மட்டியூர் சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலை யாகவும், பல இடங்கள் குண்டும் குழியு மாகவும் மாறி போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

    இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகிப் பாதி வழியில் நிற்பதும், டயர் பஞ்சராவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடை கோடியில் உள்ள எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

    எந்த அதிகாரியும் எங்கள் குறைகளைத் தீர்க்க வருவதில்லை. கோட்டையூர் - மட்டியூர் சாலை சேதமடைந்து பல ஆண்டாகியும் சீரமைத்தபாடில்லை. மேலும், கோட்டையூருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேருந்துகள் உள்ளதால், அனைவரும் இருசக்கர வாகனங்களை நம்பியே பயணம் செய்கிறோம்.

    ஆனால், ஜல்லிகள் பெயர்ந்த கரடுமுரடான சாலையில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

    கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்துக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது மிகவும் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டிய நிலையுள்ளது. பல நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது அதிர்வில் வழியிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.

    பல நேரங்களில் அவசர மருத்துவ உதவிக்கு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையுள்ளது. நகரப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ள நிலையில், எங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    குறைந்தபட்சம் கரடுமுரடான 4 கிமீ தூரம் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பென்னி காம்பவுண்ட் வளாகத்தில் அமைந்துள்ள பாப்பீஸ் ஓட்டல் பின்புறம் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அங்கு சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் சாலை போடாமல் அப்படியே விட்டு விட்டு மற்ற பகுதியில் போட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்கள் கூறுகையில், காரை அப்புறப்படுத்தி விட்டு தார் சாலை அமைத்து இருக்கலாம். பல இடங்களில் அடிபம்பு, மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அது போல் கார் நிற்கும் பகுதியில் சாலை போடாமல் விட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது.
    • கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி 13 வது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் சாய் ராஜ் ஆகியோர் கூறுகையில்:-

    பல்லடம் நகராட்சி 13வது வார்டு பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது. இந்த நிலையில், தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது.

    மேலும் பழைய தார் சாலையை முறையாக அகற்றாமல் போடப்பட்டுள்ளதால், தார் சாலை பாலம்,பாலமாக பெயர்ந்து வருகிறது. கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது. எனவே தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடத்தல்

    விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு செட்டி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, ஜெயவிக்ரமன், கவுசிகி, தொழில் நுட்ப அலுவலர் ரவி, பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், வேல்முருகன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    • மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 21,23-வது வார்டிற்குட்பட்ட கொத்தூர் முதல் கொத்தகொண்டப்பள்ளி பிரதான சாலை, 100அடி சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×