search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden inspection"

    • ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளதால் நடவடிக்கை
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவு

    போளூர்:

    போளூரில் வருகிற 19-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேரணி நடைபெறும் தெருக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென்று ஆய்வு செய்தார்.

    மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
    • பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பதிவேடுகளை பார்வையிட்டு சோதனை நடத்தினார்
    • நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்து வமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று செல்லும் புறநோயாளி களிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவி உடல் நலம் விசாரித்து காலதாமதமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளித்து விரைவில் பள்ளி அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.

    மேலும் இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் கார்த்திகேயன், சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • நீதிமன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
    • ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார். சர்வே பணிகளை தாமதம் இன்றி செய்து தரவும், நீதிமன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் அங்குள்ள திருப்பூர் மாவட்டத்திற்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.
    • அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.

    மேலும் நீர் நிலைகள், குடிநீர் வசதி, அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், மக்கும் குப்பை-மக்கா குப்பை, கழிவறை வசதிகள், உறிஞ்சி குழிகள், ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள், குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியின்போது, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி திட்ட அலுவலர்கள் முரளி, அனுராதா, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன், ஊராட்சிமன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலக செயற்பொறியாளர்கள் பிரபாவதி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    • பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    • பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தை சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டது. தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலையம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரிவர செய்யப்படுகிறதா பஸ் பயணிகளுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திடீரென கழிவறைக்குள் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ கழிவறையை தினமும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேணிக்காக்க வேண்டும்.

    பஸ் நிலையத்தை ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற நடவடிக்கை மேற்எகொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் தனிகவனம் பஸ் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அங்கு வந்த பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    • பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
    • சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.

    திருப்பூர் 

    திருப்பூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால் அடிக்கடி குற்ற சம்பவம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ,உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மேலும் 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.

    • கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.
    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.

    மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் நடக்க வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் வலியுறுத்தினார்.

    மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே நல்பெயரை வாங்கும் வகையில் நல்ல முறையில் பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

    மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.

    இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    ×