என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
- பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
- பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தை சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டது. தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலையம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரிவர செய்யப்படுகிறதா பஸ் பயணிகளுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திடீரென கழிவறைக்குள் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ கழிவறையை தினமும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேணிக்காக்க வேண்டும்.
பஸ் நிலையத்தை ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற நடவடிக்கை மேற்எகொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் தனிகவனம் பஸ் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது அங்கு வந்த பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.