தியாகதுருகம் - உதயமாம்பட்டு சாலையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.
தியாகதுருகம் - உதயமாம்பட்டு தார்ச்சாலையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அருகில் நகர செயலாளர் ஷியாம் சுந்தர் உள்ளார்.
தியாகதுருகம் - உதயமாம்பட்டு தார்ச்சாலையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அருகில் நகர செயலாளர் ஷியாம் சுந்தர் உள்ளார்.
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com