போளூரில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளதால் நடவடிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவு
போளூரில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
Published on

போளூர்:

போளூரில் வருகிற 19-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேரணி நடைபெறும் தெருக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென்று ஆய்வு செய்தார்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com