search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tar road"

    • பூமி பூஜை போடப்பட்டது
    • ரூ.4.75 கோடி ஒதுக்கீடு

    வந்தவாசி:

    வந்தவாசி நகரின் பிரதான சாலையான பஜார் வீதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.4.75 கோடி செலவில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பூமிபூஜை மற்றும் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை, மழைநீர் வடிகால்வாய், 3 சிறுபாலங்கள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    • தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
    • பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சக்கிமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர். நகர், நரிக்குறவர் காலனி, அன்னை இந்திரா நகர், சத்யா நகர், அம்பேத்கர் நகர், அஞ்சுகம் நகர் ஆகியவை உள்ளன. இங்கு 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அம்பேத்கர் நகர் முதல் அஞ்சுகம் நகர் வரை தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்து சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

    எனவே அம்பேத்கர் நகருக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஆகியவை வருவதில்லை. அம்பேத்கர் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி. நிதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு எந்தவித பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கல்மேட்டில் உள்ள சிலைமான் புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளது. 4 ரோடு சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    அம்பேத்கர் நகரில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், வணிக வளாகம் கட்டிடம் மற்றும் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தாமரை சின்னம் பொறித்த குடையை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ஊருடையான் குடியிருப்பு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தார்

    இதன் காரணமாக அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மந்த நிலையில் நடைபெற்று வந்த அந்த பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து. இன்று தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை 831 மீட்டர் சாலை ரூ.1 கோடியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை எம்.எல்.ஏ. க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, கவுன்சிலர் ரவீந்தர், தச்சை மண்டல உதவி கமிஷனர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சலசலப்பு

    ஸ்ரீபுரத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்திருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பா.ஜனதா கட்சி கொடி கலரில் இருந்த குடையை விரித்து பிடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாமரை சின்னம் பொறித்த குடை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

    பேட்டி

    பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம். பா.ஜனதா ஆதரவு கொடுத்துள்ள அ.தி.மு.க ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதிகமான செலவு ஏற்படும். அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மலை ஊராட்சியில் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியில் கடந்த 10 வருடங்களாக சாலை வசதிகள் செய்து தராமல் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி தங்களது ஊர்களுக்கு சென்று வருவதாக தென்மலை, சுப்பிரமணியாபுரம், அருக ன்குளம், செந்தட்டியாபுரம், புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அக்கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மூலமாக பணி ஆணையை பெற்று பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மீனலதா முத்தரசுபாண்டியன், துனைத்தலைவர் தேவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஒன்றிய துணை செயலாளர் குமார், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணை ப்பாளர் முருகன் சாமிநாதன், கிளைச் செயலாளர் கருத்த பாண்டியன், குருசாமி, முருகேசன், ராஜகோபால், பரமன், அருகன்குளம் கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துராமன், தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் மகிழமுத்து, வாசு. ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பரமன், தேவபிச்சை, பிச்சைமணி, காளிமுத்து, கிரகதுரை, முத்தையா, வெள்ளகணேஷ், ராஜீவ் காந்தி, குணா, மணி, சங்கர், அருண், சக்தி, உள்ளார் மணிகண்டன், விக்கி, அரசு ஒப்பந்ததாரர்கள் மதன், மனோஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சாலையை அமைத்துத் தர முயற்சிகள் மேற்கொண்ட யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியனுக்கு தென்மலை, சுப்பிர மணியா புரம், அருகன்குளம், செந்தட்டி யாபுரம் புதூர் ஆகிய ஊர்களை சேர்ந்த பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம், அழிவிடைதாங்கி மதுரா பெருமாள்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.46.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தார் சாலையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு, மா. கி. வெங்கடேசன், மோ. ரவி, ராம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை
    • பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 17-வது டிவிசனுக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் வெள்ளி சீனி, அவைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர்கள் அன்பு செழியன், சொர்ணபுரி முத்தப்பன், பிரதிநிதிகள் பாலாஜி, கோவிந்தன், மணி, அசோசியேஷன் தலைவர் டாக்டர் சந்திரமவுலி, செயலாளர் லாவண்யா, பொருளாளர் மாங்கனி கிருஷ்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×