வந்தவாசி பஜார் வீதியில் புதிதாக தார் சாலை

பூமி பூஜை போடப்பட்டது ரூ.4.75 கோடி ஒதுக்கீடு
வந்தவாசி பஜார் வீதியில் புதிதாக தார் சாலை
Published on

வந்தவாசி:

வந்தவாசி நகரின் பிரதான சாலையான பஜார் வீதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.4.75 கோடி செலவில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பூமிபூஜை மற்றும் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை, மழைநீர் வடிகால்வாய், 3 சிறுபாலங்கள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com