ரூ.46.27 லட்சத்தில் தார் சாலை

ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் ஏராளானோர் கலந்து கொண்டனர்
தார்  சாலையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
தார்  சாலையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
Published on

செய்யாறு:

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம், அழிவிடைதாங்கி மதுரா பெருமாள்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.46.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தார் சாலையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு, மா. கி. வெங்கடேசன், மோ. ரவி, ராம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com