என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- பதிவேடுகளை பார்வையிட்டு சோதனை நடத்தினார்
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்து வமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று செல்லும் புறநோயாளி களிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவி உடல் நலம் விசாரித்து காலதாமதமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளித்து விரைவில் பள்ளி அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.
மேலும் இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் கார்த்திகேயன், சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.