கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு

கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு
Published on

ஈரோடு:

கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.

மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் நடக்க வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் வலியுறுத்தினார்.

மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே நல்பெயரை வாங்கும் வகையில் நல்ல முறையில் பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com