

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தல்
விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.