search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரூ.2.29 கோடி  மதிப்பில் தார்சாலை பணிக்கு பூமி பூஜை
    X
    கோப்புப்படம்.

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரூ.2.29 கோடி மதிப்பில் தார்சாலை பணிக்கு பூமி பூஜை

    • ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான கிராம இணைப்பு சாலை கோரிக்கைக்கு தற்பொழுது ரூ.2.29 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை இருந்தது.

    தற்பொழுது விவசாயம் மற்றும் ஜவுளி பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல சிறு பாலங்கள் கட்டுவதற்கும் இத்திட்டப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 2½ கி.மீ. தொலைவிற்கு 5 பாலங்களுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, திம்மரச நாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்க்ஷயா தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×