search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை -  எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
    X

    பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்த காட்சி.

    கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை - எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    • எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாக பணிகள் நடைபெற உள்ளது.
    • பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில், 15-வது பொது நிதிக்குழு மானிய திட்ட நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சபரி நகரில் கான்கிரீட் சாலை அமைத்தல், எம். ஏ. நகரில் புதிய தார் சாலை அமைத்தல், அய்யாவு நகரில் கப்பி சாலை அமைத்தல், மீனாம்பாறை மயான சாலை, அவரப்பாளையும் இணைப்பு சாலை, உதயம் நகரில் கழிவு நீர் கால்வாய், எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாகம், உள்ளிட்ட பணிகள் ரூ.1.66 கோடியில் நடைபெற உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×