search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலையம்"

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேசினர்.
    • திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த சரல்விளையைச் சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மகள் அஸ்வினி (வயது 18).

    இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி அஸ்வினி வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை

    இதனைத் தொடர்ந்து அய்யப்பன் தனது மகளை பல இடங்களிலும் தேடி னார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினி நேற்று ஒரு வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வினு (21) என்றும் தாங்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அஸ்வினி தெரிவித்தார்.

    மேலும் தனக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பா டுகள் செய்யப்பட்டதாக வும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினுவை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து போலீசார், இரு தரப்பி னரையும் வரவழைத்து பேசி னர்.

    • தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
    • 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையிட்டார்

    திருச்சி:

    திருச்சி மாநகர் அருகில் உள்ள தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தற்போதைய நிலையில் மூன்றாவது கண்ணாக கண்காணிப்பு கேமராக்கள் விளங்குகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலே குற்றவாளிகள் நகருக்குள் வர பயப்படுவார்கள். குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமராகளை பொருத்துவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். அதை சரியாக பராமரிப்பது இல்லை. முக்கிய குற்றங்கள் நடந்த பிறகு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும்போது, அது தற்போது செயல்படவில்லை என்ற பதில் மட்டுமே வருகிறது.

    எனவே தற்போது தொடங்கி இருக்கும் இந்த கண்காணிப்பு கேமரா பணி தொடர்ந்து பராமரித்து செயல்பட வேண்டும். தீரன் நகரில் விரைவில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சார்பாக புறங்காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி மக்கள் தங்களையும் தங்கள் வீடுகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .

    இந்நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், நாச்சி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தீரன்நகர் பாரதியார் மக்கள் நல சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நித்திரவிளை, சுசீந்திரம், வடசேரி, நேச மணி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது போலீ சார் அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளித்த னர். அணிவகுப்பு மரியா தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட் டார்.

    இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வருகை பதிவேடு ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் தகவல் அறிக்கை புகார் மனு அளிக்க வந்தவர்களின் விபரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இதுவரை எத்த னை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளி லும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என் பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.வழக்கு களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    மகளிர் போலீஸ் நிலை யங்களுக்கு குடும்ப பிரச்சி னைகள் பெண்கள் மீதான தொந்தரவுகள் தொடர்பான புகார் மனுக்கள் வரும்.அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.

    உங்களது பிரச்சினை களை புகார் பெட்டியில் போட்டால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும், நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அண்ணா பஸ்நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அங்குள்ள கழிவறையை சென்று பார்வையிட்டார். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதை தொடர்ந்து அதிகாரியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து நாகராஜா திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் மோசமாக காணப்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பஸ் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்தமோகன்,மண்டலத் தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா, திமுக மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
    • இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

    அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.

    இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

    இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

    தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.

    இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.

    எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,

    மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம்.
    • சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3 லட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3 லட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளில் 80 ஆதிதிராவிடர்களுக்கும், 20 பழங்குடியினருக்கும் வழங்கப்படும். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.90 லட்சம், வங்கி கடன் ரூ.1.95 கோடி என முடிவு செய்யப்பட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.90 ஆயிரம் வீதம் ரூ.1.80 லட்சம் ஆகவும், பழங்குடியினர் 1 நபருக்கு ரூ.90 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி., பான் கார்டு, அட்ரஸ் புரூப் இருக்கவேண்டும்.

    விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டபின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகை டான்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள்http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    டி.என்.பாளையம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,

    கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக ரூ. 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம்.
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும், ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்பட்டும் திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க திறந்து உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அங்கு தருமபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொக்கநாதர் பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருஞான சம்பந்தத ம்பிரான், சொக்கலி ங்கம்தம்பிரான், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, ஆன்மிகபேரவை ஒருங்கி ணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் மற்றும் தருமபுரம் மடத்தினை சேர்ந்த கோதண்டராமன், செந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை தருமபு ரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×