search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார"

    • வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
    • இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்கு, வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.

    சாலையோரம்

    பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலையோரத்தில் ஆடுகளை வெட்டி, திறந்த வெளியில் கடைவிரித்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே வாழப்பாடி பேரூராட்சியில் திறந்த வெளியில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்றவும், சுகாதாரமான முறையில் இறைச்சி கடைகள் செயல்படவும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
    • இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.

    இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
    • இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

    அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.

    இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

    இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

    தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.

    இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.

    எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது.
    • அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது. சுகாதார பேரவை அட்மா சேர்மன் தனராசு தலைமை வகித்தார். பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அதை தொடர்ந்து அனைவரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா வரவேற்றார். நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் கலந்துகொண்டு திட்ட விளக்க உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் நல்லூர் பொன். விஜய்ராகுல், குன்னமலை பூங்கொடி, கூடசேரி சுப்பிரமணி, பில்லூர் சரண்யா,பிள்ளைகளத்தூர் வனிதா, நடந்தை வசந்தா, மாணிக்கநத்தம் வேலுசாமி, மேல் சத்தம் யோகாம்பிகா உட்பட 20 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், பரமத்தி ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், கந்த ம்பாளை யம் அரிமா சரவணன், கந்தம்பா–ளையம் ரிக் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த கேப்டன் துரைசாமி, வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்ப–ணித்துறை அலுவலர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு நகர சுகாதார அலுவலர் டாக்டர் மணிவேல், சுகாதார பணிகள் உதவி திட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ், மாவட்ட சுகாதார பணிகள் பயிற்சி மருத்துவர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவி–லியர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர். டெங்கு, குடும்ப நலம் சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்மொழிவுகள் தீர்மானங்க–ளாக நிறைவேற்றப்பட்டு துணை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலக்குறிச்சி ஊராட்சித்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்த லைவர் குணவதி முன்னிலை வகித்தார்.

    களப்பணியாளர் வடமலை வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நிறு வன இயக்குனர் சரவ ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி–யில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர். முடிவில் களப்பணியாளர் கணேசன் நன்றி கூறினார்.

    ×