search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
    • “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.

    அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.

    அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.

    உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:

    "நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

    ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.

    ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.

    கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,

    கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே

    "நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.

    ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.

    நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.

    வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!

    அனைத்தும் சிவனின் இரவுகளே!

    அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.

    பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.

    எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

    பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.

    இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,

    அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.

    சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.

    • பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
    • வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    சிவபக்தனாக ராவணன், தினமும் கோவிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம்.

    பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

    சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான்.

    இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.

    பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள்.

    விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.

    அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

    அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள்.

    ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    • ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.
    • எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.

    இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள்.

    மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர்.

    சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர்.

    எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

    • ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
    • இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

    சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம்.

    இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு.

    ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

    பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது.

    அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர்.

    பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

    அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர்.

    இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

    • இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
    • திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடிய தால் கபாலம் நீங்கியது.

    இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார்.

    இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதைக் கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார்.

    ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.

    ஸ்ரீரங்கம்

    திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில்

    கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள்.

    அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள் பாலித்தபடி அமர்ந்துள்ளார்.

    ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன்

    ஒரே சந்தியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.

    • ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
    • தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.

    லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும்.

    சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும்.

    பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.

    எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள்.

    தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக,

    பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.

    எனவே, சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    • ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்
    • ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் திருமணமான பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கும் பாடல்பாடி பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
    • செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

    சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

    சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

    சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இட்டும்,

    படத்திற்கு பூக்கள் வைத்தும் அலங்கரிக்க வேண்டும்.

    அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து

    அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

    சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம்.

    வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும்.

    செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

    இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

    எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து,

    "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே"

    என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

    சரஸ்வதி பூஜையின் போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று.

    பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

    கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருள செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

    பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம்.

    சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள்

    சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும்.

    • பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.
    • இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.

    இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி நாளிலும் கூட இதைப் பாராயணம் செய்வதால் நன்மை உண்டாகும்.

    அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேற தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை படிப்பதும் வழக்கம்

    மிகவும் சிறப்பு வாய்ந்த அந்த மங்கள சண்டிகை துதி வருமாறு:

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    மங்கள வாரம் சொல்லிட வேண்டும்.

    மங்கள கன்னிகை ஸ்லோகம்

    இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.

    படைப்பவள் அவளே

    காப்பவள் அவளே

    அழிப்பவள் அவளே சக்தி

    அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே

    அடைக்கலம் அவளே சக்தி

    ஜயஜயசங்கரி கவுரி மனோகரி

    அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

    சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி

    திருவருள் தருவாள் தேவி

    கருணையில் கங்கை

    கண்ணனின் கங்கை

    கடைக்கண் திறந்தால் போதும்

    வருவினை தீரும், பழவினை ஓடும்

    அருள் மழை பொழிபவள் நாளும்

    நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்

    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

    பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!!

    • அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் “எழுத்தறிநாதர்“ என்ற பெயர் பெற்றார்.
    • பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    விஜயதசமியைக் கல்வித் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

    பல குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம்.

    இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.

    அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர எழுதி முடிக்கவில்லை.

    எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

    ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்டினார்.

    கணக்கு பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.

    இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர்.

    கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார்.

    பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.

    இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார்.

    அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்" என்ற பெயர் பெற்றார்.

    ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள்.

    தினமும் இந்த வழிபாடு இக்கோவிலில் நடக்கிறது.

    பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இங்கு அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன் உண்டாகிறது.

    • ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.
    • ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்கள்.

    ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன.

    அவற்றைத் தேர்ந்தெடுத்து பூஜித்தல் அவசியம்.

    முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.

    இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும்.

    மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

    ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.

    ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.

    ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

    எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.

    • பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
    • இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

    ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள்.

    இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.

    பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.

    இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

    நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய

    மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.

    அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

    ×