search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி"

    • மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஊட்டி,

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.31 சதவீதம் அதிகம்.

    தமிழகம் முழுவதும் பிளஸ் -2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி மாவட்டம் 93.85 சதவீதம் பெற்று, மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 3246 மாணவர்கள், 3743 மாணவியர்கள் என மொத்தம் 6989 பேர் எழுதினர்.

    இதில், 2945 மாணவர்கள், 3614 மாணவிகள் என மொத்தம் 6559 பேர் தேர்ச்சிடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.85 சதவீதம் ஆகும். மாணவர்கள் 90.73 சதவீதமும், மாணவிகள் 96.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட 1.31 சதவீத தேர்ச்சி அதிகம்.

    மாவட்டத்திலுள்ள 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு மாதிரி பள்ளி, கக்குச்சி, மேலூர் ஒசஹட்டி, சோலூர், தாவணி, எமரால்டு ஆகிய 6 அரசு பள்ளிகள், குஞ்சப்பணை பழங்குடியின நலப்பள்ளியும் அடங்கும். குஞ்சப்பணை பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள், 19 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பலர் தங்களின் பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண்களை பார்த்து, ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    • செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர். நெகனூர் அரசு பள்ளியில் 42 மாணவர்கள் 51 மாணவிகள் என 93 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவர்கள் 34 மாணவிகள் என 75 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தனர். அரசு பள்ளியில் பயின்று நூறு சதவீதம் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    மேலும் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் செந்தமிழ், ஜெயாஷாலினி, கோபிகிருஷ்ணன், குருநாத், உள்ளிட்டவர்களை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை படைத்தது.
    • சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் பழனியப்பன் 582 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரூவாந்திகா 575 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம், தாளாளர் நிவேதிதா, இயக்குனர் ஞானகுரு, முதல்வர் சசிகலா பாராட்டினர்.

    • புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    இந்த பள்ளியின் மாணவி காவியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சுபஸ்ரீ 576 மதிப் பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரவின் ரஸ்மிதா 569 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள் ளார். கணிப்பொறியியல் பாடத்தில் 6 பரும், அக்கவுண்டன்சியில் 4 பேரும், காமர்ஸ்சில் 3 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

    காரைக்குடி

    மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

    • நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளி யாகின. இதில் மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தி யாபிவிருத்தி சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதன்படி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வேதியியல், கணினி அறிவியல், வணிக வியல் பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாண வர்களையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணி யாளர்கள் ஆகியோருக்கு மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் (உறவின்முறை) துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன், நாடார் மேல் நிலைப்பள்ளி தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் வாழத்து தெரிவித்து உள்ளனர்.

    • 27 ஆயிரத்து 37 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    இதில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும்.

    தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 212 மாணவர்கள் , 14 ஆயிரத்து 323 மாணவிகள் என 27037 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

    இதில் 25734 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும்.இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதிக மதிப்பெண் பெற்றதையும் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் வகையில் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கி மாணவ-மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
    • அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

    கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    • மாணவர்களை காட்டிலும் மாணவிகள் சாதனை
    • மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் குமரி மாவட்டம் மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 386 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 21 ஆயிரத்து 725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.05 சதவீதமாகும். மாணவர்கள் 10 ஆயிரத்து 808 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 269 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.01 சதவீதமாகும். மாணவிகள் 11 ஆயிரத்து 578 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 456 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.95 சதவீதமாகும்.

    மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 95.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் குமரி மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 56 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 980 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில், 5 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.23 சதவீதம் ஆகும். மாணவர்கள் 3 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 777 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92.23 சதவீதம் ஆகும். மாணவிகள் 2 ஆயிரத்து 969 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 918 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.28 சதவீதமாகும்.

    • தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கோவை,

    தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்ேறாரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    ஏழாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9, 10 பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படுகிறது.

    வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும். மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கோவை மாவட்டத்தில், மொத்தம் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால் உடனடியாக வேலை தயாராக உள்ளது.
    • நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்து கொண்டிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ( ஐ.டி.ஐ) கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொழிலாளா் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 91 அரசு ஐ.டி.ஐ.களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழக முதல்வா் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்தாா். இதில், தஞ்சாவூா் ஐ.டி.ஐ.க்கு ரூ. 30 கோடி வழங்கப்பட்டது.

    ரஷியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற வெளி–நாட்டு மாணவா்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ மாணவா்களும் ரோபோடிக்ஸ், ஆட்டோ–மேஷன் போன்ற நவீன முறைகளில் பயிற்சி பெறும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 71 ஐ.டி.ஐ-களில் தலா ரூ. 3.70 கோடியில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகக் கட்டுமானமும் நடைபெறுகிறது.

    இப்பணி முடிந்த பிறகு நவீன வசதி, தொழில்நுட்பங்களுடன் மாணவா்கள் படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    தமிழகத்திலுள்ள அரசு ஐ.டி.ஐகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை 93 சதவீதமாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் ஐடிஐ-களில் இடமே கிடைக்காத நிலை ஏற்படும்.

    ஐடிஐ-இல் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே படித்து முடித்தவுடன் வேலை காத்துக் கொண்டிருக்கிறது. பெயிண்டா், ஏசி மெக்கானிக், எலக்டிரிசியன், பிளம்பா் போன்ற பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    பெரிய நிறுவனங்களில் இதுபோன்ற பணிக்கு ஆள்கள் கிடைக்காமல் அலைகின்றனா்.

    எனவே, ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால், உடனடியாக வேலை தயாராக உள்ளது. நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் இதுவரை 70 இடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 1.15 லட்சம் இளைஞா்களுக்கு தமிழ்நாடு அரசு பணிவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னா், அவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவர்–களுக்கு பணி நியமன ஆணை வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர–சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×