search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு- அமைச்சர் கணேசன் பேச்சு
    X

    தஞ்சை ஐ.டி.ஐ.யில் மாணவர்களின் செயல்முறை கற்றல் திறனை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

    ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு- அமைச்சர் கணேசன் பேச்சு

    • ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால் உடனடியாக வேலை தயாராக உள்ளது.
    • நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்து கொண்டிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ( ஐ.டி.ஐ) கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொழிலாளா் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 91 அரசு ஐ.டி.ஐ.களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழக முதல்வா் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்தாா். இதில், தஞ்சாவூா் ஐ.டி.ஐ.க்கு ரூ. 30 கோடி வழங்கப்பட்டது.

    ரஷியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற வெளி–நாட்டு மாணவா்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ மாணவா்களும் ரோபோடிக்ஸ், ஆட்டோ–மேஷன் போன்ற நவீன முறைகளில் பயிற்சி பெறும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 71 ஐ.டி.ஐ-களில் தலா ரூ. 3.70 கோடியில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகக் கட்டுமானமும் நடைபெறுகிறது.

    இப்பணி முடிந்த பிறகு நவீன வசதி, தொழில்நுட்பங்களுடன் மாணவா்கள் படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    தமிழகத்திலுள்ள அரசு ஐ.டி.ஐகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை 93 சதவீதமாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் ஐடிஐ-களில் இடமே கிடைக்காத நிலை ஏற்படும்.

    ஐடிஐ-இல் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே படித்து முடித்தவுடன் வேலை காத்துக் கொண்டிருக்கிறது. பெயிண்டா், ஏசி மெக்கானிக், எலக்டிரிசியன், பிளம்பா் போன்ற பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    பெரிய நிறுவனங்களில் இதுபோன்ற பணிக்கு ஆள்கள் கிடைக்காமல் அலைகின்றனா்.

    எனவே, ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால், உடனடியாக வேலை தயாராக உள்ளது. நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் இதுவரை 70 இடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 1.15 லட்சம் இளைஞா்களுக்கு தமிழ்நாடு அரசு பணிவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னா், அவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவர்–களுக்கு பணி நியமன ஆணை வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர–சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×