காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை படைத்தது. சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் பாராட்டினர்.
காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் பழனியப்பன் 582 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரூவாந்திகா 575 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம், தாளாளர் நிவேதிதா, இயக்குனர் ஞானகுரு, முதல்வர் சசிகலா பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com