திறனாய்வு தேர்வில் தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவர்கள்.
திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவர்கள்.
Published on

முத்துப்பேட்டை:

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com