search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mastery"

    • எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • 10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் முதலிடத்தை பெற்றார்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானகிரி எஸ்.ஆர்.வி.வி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

    10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் இந்த பள்ளியில் முதலிடத்தை பெற்றார். மாணவர் ஆதிஸ்குமார் 2-ம் இடத்தையும், மாணவி விலாஷினி பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் அய்யப்பன் பாராட்டி பேசுகையில், பள்ளி ெதாடங்கிய காலம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறோம். எஸ்.ஆர்.வி.வி.சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    மேலும் அவர் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்களும் பாராட்டினர்.

    • பிளஸ்-2 தேர்வில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் கிளப் மூலமாக 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 தேர்வில் தேர்வு எழுதிய 201 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பொன் அஜித் குமார் 593 மதிப்பெண்களும், மாணவிகள் பூஜாஸ்ரீ 587 மதிப்பெண்களும், விஜயமதி 585 மதிப்பெண்களும், யுவஸ்ரீ 585 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பல்வேறு பாடங்களில் மொத்தம் 53 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களை பாராட்டும் வகையில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பிரி கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் வகையில் மாறுபட்ட நடைமுறைகளில் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    • பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை படைத்தது.
    • சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் பழனியப்பன் 582 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரூவாந்திகா 575 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம், தாளாளர் நிவேதிதா, இயக்குனர் ஞானகுரு, முதல்வர் சசிகலா பாராட்டினர்.

    • புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    இந்த பள்ளியின் மாணவி காவியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சுபஸ்ரீ 576 மதிப் பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரவின் ரஸ்மிதா 569 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள் ளார். கணிப்பொறியியல் பாடத்தில் 6 பரும், அக்கவுண்டன்சியில் 4 பேரும், காமர்ஸ்சில் 3 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    • பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படும்.
    • மாற்றுத்திறனாளிகளில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதியில ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுப்பிரிவினருக்கு உதவித்தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம் வழங்கப்படும்.

    இதே போல் அனைத்து வகை மாற்று திறனாளிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படும்.

    ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு , மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்ட படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரீடிங் மராத்தான் என்ற செயலி வழியாக 12 நாட்களில் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள், 263 கோடி சொற்களை வாசித்துள்ளனர்.
    • பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டினால் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலை வந்து விடகூடாது என்பதனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் 13,332 ஆசிரியர்கள் நியமிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளோம். இந்த கல்வியாண்டில் மட்டும் 8000 முதல் 8500 ஆசிரியர்கள் நியமித்துள்ளோம். இன்னும் ஆசிரியர்கள் நியமிப்பதை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களது தினசரி அட்டவணையில் நூலகத்திற்கு என 20 நிமிடம் ஒதுக்கி நூலக நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. "ரீடிங் மராத்தான்" என்ற செயலி வழியாக 12 நாட்களில் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள், 263 கோடி சொற்களை வாசித்துள்ளனர். இந்த செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் வாசிப்பு முறையை ஒழுக்கப்படுத்துதலும் முறைப்படுத்தப்பட்டது.

    10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழுதடைந்த கட்டிடங்களில் எந்த குழந்தைகளும் அமர வைக்க கூடாது, கட்டடம் மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தனிகவனமும், பள்ளி திறந்த இந்த நேரத்தில் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டிய சீருடைகளும், புத்தகங்களும் சென்றடைந்து விட்டதா என்பதையும் உறுதி செய்யப்பட்டுவருகிறது.

    பள்ளி மேலாண்மை குழுவிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த 2025ம் ஆண்டு என்பதனை இலக்காக கொண்டு நாம் செயல்பட நம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டினால் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    முன்னதாக, போதை ஒழிப்பு தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளி கல்வித்துறை, மாநில திட்ட இயக்குநர் சுதன், மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, துரை.சந்திரசேகரன், பன்னீர் செல்வம், மாவட்ட ஊராட்சித்தலைவர்பாலசுப்ர–மணியன்மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் அ.தியாகராஜன் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
    • இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தோ்வுகள் வெளியிடப்பட்ட நிலையில், பிளஸ் 1 தோ்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி என மொத்தம் 159 பள்ளிகளைச் சோ்ந்த 7352 மாணவா்கள், 7762 மாணவிகள் என 15,114 போ் தோ்வு எழுதினா்.

    தோ்வு எழுதியவா்களில் 6622 மாணவா்களும், 7579 மாணவிகளும் என மொத்தம் 14,201 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 90.07 சதவீதமும், மாணவிகள் 97.64 சதவீதமும் என மொத்தம் 93.96 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

    10-ம் வகுப்பில் மாநில அளவில் 5-வது இடமும், பிளஸ்-2 தோ்வில் மாநில அளவில் 3-வது இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. பிளஸ் -1 பொதுத்தோ்வு 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் ராமநாதபுரம் 16-வது இடத்தையும், 2019-ம் ஆண்டில் 7-வது இடத்தையும், 2020 -ம் ஆண்டில் 14-வது இடத்தையும், 2020 கொரோனா தடுப்பு நடவடி க்கையாக முழு தோ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    பிளஸ்-1 தோ்வில் 70 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5898 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 5309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி 83.44 சதவீதம் மாணவா்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் என 90.01 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 37 உதவி பெறும் பள்ளிகளில் 94.63 சதவீதம் பேரும், 52 தனியாா் பள்ளிகளில் 99.68 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

    பிளஸ்-1 தோ்வில் அரசுப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் 46 பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அறிவியல் பிரிவுகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களிலும், கலையியல் பிரிவுகளில் வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய வற்றிலும் அதிக மானோா் தோல்வியடைந்துள்ளனா்.

    இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.

    ×