எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி

எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் முதலிடத்தை பெற்றார்.
சாதனை படைத்த மாணவர்களுடன் எஸ்.ஆர்.வி.வி. பள்ளி தாளாளர் அய்யப்பன், முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுடன் எஸ்.ஆர்.வி.வி. பள்ளி தாளாளர் அய்யப்பன், முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்ளனர்.
Published on

காரைக்குடி

மத்திய அரசின் இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானகிரி எஸ்.ஆர்.வி.வி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் இந்த பள்ளியில் முதலிடத்தை பெற்றார். மாணவர் ஆதிஸ்குமார் 2-ம் இடத்தையும், மாணவி விலாஷினி பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் வென்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் அய்யப்பன் பாராட்டி பேசுகையில், பள்ளி ெதாடங்கிய காலம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறோம். எஸ்.ஆர்.வி.வி.சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

மேலும் அவர் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்களும் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com