search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்பு விழா"

    • கல்லூத்து ஏ.டி.காலனியில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது.
    • ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும்.

    ஆலங்குளம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 2021-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 2021-22 நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடம், கரிவல ம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார கட்டிடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலக் கடையநல்லூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலப்பாவூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம், பொட்டல்புதூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கான மருந்துகளை எப்போதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும் என்றார்.

    தொடர்ந்து பெண்க ளுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருள்கள் வழங்கினார். முன்னதாக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் மருதபுரத்தில் சிறப்பாக அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்பு பஸ் நிலையத்தில் கழக கொடி யினை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வாணன், ஒப்பந்த தாரர் கணேஷ் பாண்டியன், மருத்துவர்கள் தண்டாயு தபாணி, குத்தால ராஜ், தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, மாவட்ட நலக்கல்வி யாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் மற்றும் செவிலி யர்கள், மருத்துவ பணியா ளர்கள், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, அன்பழகன், சீனிதுரை , சிவன் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். வட்டரா மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடக்கிறது.
    • முதல்வர் சோமசுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் உடனடியாக அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு பயிற்சி வழங்கும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம் முகமது சதக் சென்டரில் நடந்த நெக்ஸான் என்டர்பிரைசஸ் திறப்பு விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனருமான பி.ஆர்.எல்.ஹாமீது இபுராகிம் தலைமையில் முகம்மது சதக் அறக்கட்டளை சி.இ.ஒ. டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் கல்வி நிறுவனங்கள் ஆலோசகர் சுமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெக்ஸான் செயல்பாடுகள் குறித்து வர்த்தக மேலாண்மை அலுவலர் நிஷா கூறுகையில், ெசன்னையில் தொடங்கப்பட்ட நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி நிறுவனமானது 2 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து பயிற்சியை வழங்கி வருகிறது. இதுவரை ஆயிரம் பேர் தனியார் நிறுவ னங்களிலும், அரசு துறைகளிலும் பணியில் சேர்ந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் அனைவரும் தகுந்த வேலையில் சேர்வதற்கு நாங்கள் ஒரு படிக்கட்டாக செயல்படுகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ராஜசேகர், ஷேக் தாவூது, கல்வியல் கல்லூரி முதல்வர் சோம சுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

    அமைச்சர் திறப்பு

    திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அமைச்சர் வருகையை யொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை சுற்றி பார்த்தார்.

    அப்போது அவருடன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணிதுணை அமைப்பாளர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சி லர்கள் சேக் முகமது, சுபாஷ் சந்திரபோஸ், தொழில திபர் மாரித்துரை, நெட்டூர் வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் ஆறுமுகம், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் கங்காதரன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கிளைச் செயலாளர் கணேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார்.
    • புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி 3-வது வார்டில் பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார். அப்பகுதியில் பேரூராட்சி பொது நிதி ரூ.7 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.டி.சாலமோன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஆரோக்கியமேரி, காங்கிரஸ் நகரத் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் அருணாசலம், மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள்
    • ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புன்னைநகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள மங்களம் காம்ப்ளக்ஸ் மாடியில் செயல்பட்டு வந்த மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் விற்பனை நிலையம் நாளை முதல் கீழ் தளத்தில் செயல்பட உள்ளது.இதன் திறப்பு விழா நாளை (3-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வர வேற்கிறார்கள். இதுதொடர்பாக அதன் உரிமையாளர் பிரவீன் ஜோ கூறியதாவது:-

    மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இல்லங்களில் மற்றும் உள்ளங்களில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் ஒரு கார்டு. ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது.

    திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம் தொடர்ந்து பொதுமக்கள் நல்ல ஆதரவை அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பேசினார்.
    • விழாவில் புளியரை ஊராட்சி தலைவர் அழகிய சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    காந்தியடிகளின் கனவின்படி அடிப் படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராம பணி களை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகையில், அடிப்படை வசதி இல்லாத குக்கிராமமான செங்கோட்டை அருகே உள்ள புளியரை அடுத்து இருக்கும் மடத்தரை பாறையில் கிராம மக்கள் பொதுநூலகம் வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது என்றார்.

    விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மகாத்மா காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் பேசும்போது, எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியு டனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணி களை மேற்கொள்ளப்போ வதாக கூறினார். விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜய லட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.

    • மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார்.
    • விழாவில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய வெங்காடம்பட்டி ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொருள்செல்வி, சரஸ்வதி, தமிழ்செல்வி, விஜயா அம்பிகா, குருசாமி, நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வை யாளர் கார்த்திகேயன், திடக்கழிவு மேலாண்மையின் ஒருங் கிணைப்பாளர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் மயிலரசன், அரசு ஒப்பந்ததாரர் குமார், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    அரவேணு,

    ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்

    இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
    • காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பரமக்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்

    ஆலங்குளம்:

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள காமராஜர் சிலை அகற்றப்பட உள்ளது. இதை யடுத்து பஸ் நிலையத்தின் கீழ்புறம் புதிய சிலையை அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்தது.

    அந்த இடத்தில் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா காமராஜர் பிறந்த நாளான நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்கினார். ஆலங்குளம் பேருராட்சி துணைத்தலைவர் எஸ்.டி.ஜான்ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.எஸ். காமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் டி.சாலமோன் ராஜா வரவேற்றார்.

    தொடர்ந்து கல்வி கண் திறந்த காமராஜரின் புதிய வெண்கல சிலையை ஆலங்குளம் டி.டி.ஏ. பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தின ராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு திறப்பு விழாவிற்கு வந்திருந்த வர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பழனி நாடார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல தலைவர் டி.பி.வி. வைகுண்ட ராஜா, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், தமிழ் செல்வி போஸ், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலடி எழில்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட தலைவர் டி.பி.வி. கருணாகரராஜா, தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ், காமராஜர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு கமிட்டி பொருளாளர் பர்வீன்ராஜ், மூத்த வழக்கறிஞர் பால கணேசன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரம், நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உதயராஜ், நகர நாடார் சங்க தலைவர் தூசி. செல்வராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநிலத் தலைவர் ஞானபிரகாஷ், சுபாஷ் சந்திரபோஸ், நகர தலைவர் தாமஸ், வட்டார தலைவர் ரூபன், ச.ம.க. நகர தலைவர் ஜெயபாலன், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, அருணாச்சலம், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் தங்க செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீஅரசடி வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து நெல்லை பேட்டையை சேர்ந்த ஜாண்பாவா சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சியோடு 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலை மையில் 121 முளைப்பாரி மற்றும் பொய்க்கால் குதிரை, கரகாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து புதிய சிலையை அலங்கரித்தனர். இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலி பர்கள், இளம்பெண்கள், முதிய வர்கள் என திரளா னவர்கள் வந்து ரசித்தனர்.

    காமராஜரின் புதிய வெண்கல சிலை திறக்கப்படுவதை அறிந்த பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமலஹாசன் கட்சியி ன் மாவட்ட நிர்வாகி யான தொழி லதிபர் கருணாக ரராஜா மூலமாக வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியி ருந்தார். முடிவில் வட செ ன்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் நன்றி கூறினார்.

    இந்த விழாவில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத் தலைவர் சிவ அருணன், முதல் வகுப்பு அரசு ஒப்பந்த தாரர் கரையாளனூர் சண்முகவேல், தொழில திபர்கள் மணிகண்டன், மோகன்லால், தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வ மோக ன்தாஸ் பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் பிரபா கரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


    காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.


     


    ×