search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்பு விழா"

    • காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது.

    பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசினார்.
    • நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார்.

    சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார். 

    உணவக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளை கொண்டு வயிற்று பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.

    இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசிய நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், "நான் உள்ள வரும் போது பார்த்திபனாக இருந்தேன். என்னை செல்வமணியாக மாற்றி தலை முழுக்க ரோஜாக்களாகிவிட்டது. அவர் தான் ரோஜாவை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்.

    இவர்கள் கொடுத்த காஃபியில் வடிவமைப்பு இடம்பெற்று இருந்தது. இப்போ எல்லாம் காஃபியில் தாமரை பூ போன்ற டிசைன் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக நான் பா.ஜ.க.-வுக்கு விளம்பரம் பண்றேன்னு எடுத்துக்காதீங்க. மக்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கின்றனர்" என தெரிவித்தார்.

    • ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
    • பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.

    அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

    இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.

    இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.

    இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
    • பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


    விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.

    அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.


    அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

    அதன் பிறகு இணைப்பு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 'மிக்ஜம்' புயலால் பெய்த பலத்தமழை காரணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்- அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் தேதி கொடுத்ததும் பஸ் நிலையத்தை திறப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறக்கப்படும்.

    திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுமான பிரிவு கட்டியுள்ளது. அதற்கு முறையான பணி நிறைவு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுகான வசதிகள் முறையாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை அருகே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    சிவகங்ைக

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 70லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பொறியாளர் உமாராணி, துணை தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் பிரபு, பாசறை இணை செயலாளர் மோசஸ், சதிஷ்பாலு, ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, மறவமங்கலம் ஊர் மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் ;

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதற்கு லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ண பெருமாள் தலைமை தாங்கி னார். ஊராட்சி செயலாளர் மணிகண்ட இசக்கி வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவி யம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மங்கை யர்க்கரசி, மாவட்ட பஞ்சா யத்து கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா, அஜந்தா, கிராம அதிகாரி வைகுண்டராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்தியாகு ரேமோ ஷன் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள்,

    அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் எஸ்.டி.வேலு ஜான்சன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெரு மாள், முன்னாள் துணை தலைவர் தங்கையா உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பஞ்சாயத்து வளர்ச்சிக்காக சிறந்த சேவையாற்றி யவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • அங்கன்வாடி கட்டிடங்களை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
    • நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியன் காவல்கிணறு ஊராட்சியில் காவல்கிணறு மற்றும் தெற்கு பெருங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.66 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பொது விநியோக கடையினை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.

    நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கொசிஜின், தாய்செல்வி, காங்கிரஸ் வட்டார தலைவர் அருள்தாஸ், விடுதலை சிறுத்தைகள் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன், காவல்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சம்பு, மாவட்ட பிரதிநிதி மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், தொண்டரணி மந்திரம், ஒன்றிய பிரதிநிதி சிவச்சந்திரன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி இளங்கோ, பாலகிருஷ்ணன், பழனி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது.

    தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, வள்ளலார் மைதானம் எதிரில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 50 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களுடன் தீபா சில்க்ஸ் என்னும் பட்டு அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தரைத்தளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவு, முதல் தளத்தில் பட்டு சேலைகளுக்கான சிறப்பு பிரிவு, பெண்களுக்கான ரெடிமேட் பிரிவு மற்றும் பெண் குழந்தைகளுக்கான பிரிவு, 2-ம் தளத்தில் ஆண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் ரெடிமேடு பிரிவு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பிரிவு என லிப்ட் வசதியுடன் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வடதமிழகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் உள்ள அடித்த–ளத்தில் 100 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா தருமபுரி மாவட்டம் உருவான இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தீபா சில்க்ஸ் ஜவுளி ஷோரூமை திறந்து வைத்தார். தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வனிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவை முன்னிட்டு ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தீபா சில்க்ஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா டியாகோ காருடன் செல்பி எடுக்கும் சிறந்த வாடிக்கையாளர் தேர்வு செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை நாளன்று அந்த கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.சி. சம்பத், இயக்குனர்கள் எஸ்.தியாகராஜன், எஸ்.கார்த்தி–கேயன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    பெருமாநல்லூர், செப்.27-

    திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோதிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    • உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
    • பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் வடசேரி எம்.எஸ். ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ெரட் கிராண்ட் என்ற பாரம்பரிய அசைவ உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். விழாவிற்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கே.ஆர். டிராவல்ஸ் உரிமையாளர் குமார் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோட்டல் பிரபு உரிமை யாளர் ஆனந்தன் முதல் விற்பனையை ஆரம்பித்து வைத்தார். பிசினஸ் நெட்ஓர்க் இன்டர்நேஷனல் அமை ப்பின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மண்டல இயக்குநர் முகமது ரியாஸ் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

    எஸ்.ஜே. மருத்துவமனை டாக்டர் ரூத் திலீப்குமார், டவர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஜியாவுதின், வி.ஐ.பி. ஜிம் உரிைமயாளர் சரவணசுப்பையா, பேபி மசாலாமுத்து உள்பட பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராண்ட் உணவக உரிமையாளர் சுகுமாரன் ராமதாஸ், சுஜாதா சுகுமாரன் மற்றும் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×