search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training Center"

    • இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
    • 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.

    விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

    பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

     


    விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.

    இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

    புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

    • நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடக்கிறது.
    • முதல்வர் சோமசுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் உடனடியாக அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு பயிற்சி வழங்கும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம் முகமது சதக் சென்டரில் நடந்த நெக்ஸான் என்டர்பிரைசஸ் திறப்பு விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனருமான பி.ஆர்.எல்.ஹாமீது இபுராகிம் தலைமையில் முகம்மது சதக் அறக்கட்டளை சி.இ.ஒ. டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் கல்வி நிறுவனங்கள் ஆலோசகர் சுமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெக்ஸான் செயல்பாடுகள் குறித்து வர்த்தக மேலாண்மை அலுவலர் நிஷா கூறுகையில், ெசன்னையில் தொடங்கப்பட்ட நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி நிறுவனமானது 2 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து பயிற்சியை வழங்கி வருகிறது. இதுவரை ஆயிரம் பேர் தனியார் நிறுவ னங்களிலும், அரசு துறைகளிலும் பணியில் சேர்ந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் அனைவரும் தகுந்த வேலையில் சேர்வதற்கு நாங்கள் ஒரு படிக்கட்டாக செயல்படுகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ராஜசேகர், ஷேக் தாவூது, கல்வியல் கல்லூரி முதல்வர் சோம சுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி மையம்

    பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து

    கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்கல்வி

    பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்தார்.
    • புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீசாருக்கான புலன் விசாரணை பயிற்சி மையம்பண்ருட்டியில்அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்தலைமையில் நடந்தது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வரவேற்று பேசினார்.பண்ருட்டி- கும்பகோணம் சாலை யில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில்நடந்ததிறப்புவிழாவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- இந்த புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.இதுபோன்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் போலீசார் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பயிற்சிகளின் மூலம் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.சமீபத்தில் காடாம்புலியூரில் நடந்த கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து 36 மணி நேரத்தில் முறையான ஆவண ங்களுடன் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல்செய்து போலீசாருக்கு பெருமை சேர்த்த பண்ருட்டிபோலீசாரைபாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டி யன்,நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வரபத்மநாபன், பண்ருட்டி வர்த்தக சங்க பிரமுகர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
    • போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் மூலிகை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பல்வேறு விதமான மூலிகைச் செடிகள் மற்றும் அழகுச் செடிகளும் பராம ரிக்கப்பட்டு வந்தன.

     இந்த மூலிகை தோட்டத்தை பார்ப்ப தற்காக புதுவை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

    மேலும் விடுமுறை காலங்களில் இப்பகுதிக்கு வந்து அழகிய செடிகளையும் மூலிகைச் செடிகளையும் பார்த்து ரசித்தனர்.

     மூலிகைச் செடிகளின் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். ஆனால் தற்பொழுது இந்த மூலிகை தோட்டத்தில் செடிகள் அனைத்தும் பராமரிப்பின்றி அழிந்து விட்டன.

    மூலிகை செடிகள் இருந்த இடத்தில் கோடிகள் மற்றும் முட்புதர்கள் அதிக அளவில் முளைத்துள்ளன. இங்கு போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     இங்கு பணியாற்றும் ஒரு சில ஊழியர்கள் பணியை சரியாக செய்யாமல் இங்கு வந்து ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மாணவ மாணவிகள் தங்கள் பாரம்பரிய மூலிகை வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இங்கு பணியாற்றும் அதிகாரிகளும் சரிவர பணிக்கு வருவது கிடையாது என்று தெரிய வருகிறது. இங்கு போதுமான ஆட்களை நியமித்து மூலிகைச் செடிகளை புதிதாக நட்டு பராமரிப்பு பணியை மேற்கொண்டால் இப்பகுதியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூலிகைச் செடிகளின் மருத்துவ பயன்களை அறிவதற்கு உறுதுணையாக இருக்கும்.

    இங்கு சரிவர பணியாற்றாத பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புதிய பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோழவந்தான் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி மையமாக மாறியது.
    • முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகள் முன் மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பேரூராட்சியும் ஓன்றாகும். மேலும் முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டதால் தென் தமிழகத்தில் திடக்கழிவு பற்றிய பயிற்சி மையமாக சோழவந்தான் பேரூராட்சி உருவாகி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியா பட்டி, மல்லாங்கிணறு, சுந்தர பாண்டியம், மம்சாபுரம், சேத்தூர், செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு, வா.புதூர், கொடிக்குளம் உள்ளிட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி பட்டறை முகாம் பேரூராட்சிக்குட்பட்ட ஆண்டியமேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நடந்தது.

    முகாமிற்கு பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து விண்ட்ரோ முறையில் உரமாக்குதல் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். வளம்மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இப்பயிற்சி முகாமில் பேரூராட்சி தலைவர்கள் கே.ஜெயராமன், துணை தலைவர் லதாகண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் கல்யா ணசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, துப்புரவு மேற்பார்வை யாளர்கள் சுந்தராஜன் வினோத்குமார், எலட்ரீசியன், பாலமுருகன், சோணை, வெங்கடேசன், பூவலிங்கம், பாண்டி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    • நரிக்குறவர் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் ஒன்றியம் -கல்வெட்டு மேடு இந்திரா நகர்ப்பகுதியில் உள்ள நரிக்குறவர் குழங்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை நிர்வகிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    தொண்டு நிறுவனம் தேசிய அறக்கட்டளை சட்டம்/சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் இருந்தால் ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் 80ஜி/12எ விதிவிலக்கு சான்றிதழ் (Exemption Certificate) கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.

    தர்பான் போர்டல் கட்டாயம் பதிவு செய்திரு த்தல் வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளில் தொண்டு நிறுவனத்தின் வரவு-செலவு சார்ந்த ஆண்டுத் தணிக்கை விபரங்களை வைத்திருத்தல் வேண்டும். 2019-2020, 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்திருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனம்/சுயஉதவிக் குழுவானது உண்டு உறைவிடப் பள்ளி நடத்துதல் மற்றும் நலிவடைந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான சமூக சேவை செய்தல் போன்ற செயல்பாடுகளில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மையத்தை நடத்துவதற்கு போதுமான இடவசதி இருத்தல் வேண்டும்.

    மையம் செயல்பட தேர்வு செய்யப்படும் இடம் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து கட்டிட உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு தடுப்பு, சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆகியவை தொடர் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இளஞ்சிறார் சட்டம்/விடுதிகள் சட்டம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் மின்னஞ்சல் மூலமாக சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் நாளை (3-ந் தேதி) முதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புக் கொண்டு பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10-ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    திருச்சி:

    மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை மாணவ-மாணவிகள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடம் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இதேபோல இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, முசிறி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை, அயிலாபேட்டை, சோமரசம்பேட்டை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், இனாம்குளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல வையம்பட்டி, மணப்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புள்ளம்பாடி, பெருவளப்பூர், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-1 மாணவர்களும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி காணொலி மற்றும் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் சேரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×