search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Job opportunity"

  • இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
  • 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.

  விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

  பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

   


  விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

  இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.

  இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

  புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

  • விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
  • விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

  சென்னை:

  அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  ஓமன் நாட்டில்கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள 22 முதல் 26 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் உடை மேல் உள்வர்கள் மற்றும் 165 செமீக்கு மேல் உயரமுள்ள டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்த ஆண் பணியாளர்கள், தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35,000 முதல் 39,000 மற்றும் விசா, உணவு, இருப்பிடம் விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

  விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுபவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in வலைதளம், தொலைபேசி எண்கள் (044-22505886/22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண்.(9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
  • காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

  கடலூர்:

  கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 12.8.2023, 23.9.2023 மற்றும் 25.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக, 12.8.2023 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

  இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 -ம்வகுப்பு, 10 -ம்வகுப்பு, 12 -ம்வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடைய வர்களும் கலந்துக்கொண்டு பயன்பெற லாம். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 12.8.2023 (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

  • முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
  • முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சலாவுதீன் தொடங்கி வைத்தார்.துணைமுதல்வர் சேக் முன்னிலை வகித்தார். எந்திரவியல் துறைத்தலைர் கணேஷ் வரவேற்றார். பன்னாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுதுறை மேலாளர் வேலு, பயிற்சி மேலாளர் பிரபு, தொழில்துறைப்பிரிவு மேலாளர் பழனி திருவேங்கடம், தொழில்துறைப்பிரிவு மேலாளர் ஹரி ஆகியோர் பேசினர். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் முகம்மது சதக் ஐ.டி.ஐ., ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 180 மாணவர்கள் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு எழுதினர். இதில் 126 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500-டன் தங்குமிடம் வழங்கப்படும் என பன்னாட்டு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுத்துறை மேலாளர் வேலு தெரிவித்தார். முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

  • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- 

  கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் வட்டார அளவில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய - கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற 28- ந்தேதி சனிக்கிழமை அன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

  இந்த வேலை வாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே வாய்ப்பை சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
  • ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

  திருச்சி,

  திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி.யில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்து, வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

  தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை இயக்குனர் வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விழாவில், தொழில்துறை அமைச்சர் கணேசன் பேசியபோது, சட்டமன்ற மானியக் கோரிக்கையில் கையில் ஒரு பேப்பர் கூட இல்லாமல் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பேசியவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரின் பக்கத்தில் அமரும் வாய்ப்பை பெற்றதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். காமராஜர், கருணாநிதி ஆகியோர் மதிய சத்துணவு திட்டத்தை கொடுத்தனர். ஆனால், உலகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். ஆட்சியேற்று ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம்.

  பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றார்.

  • 12-ந்தேதி நடக்கிறது
  • கலெக்டர் அறிவிப்பு

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12 - ந் தேதி மற்றும் 26 - ந் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

  இதில் பல்வேறு தனியார் துறை நிறுவ னங்கள் , ஐ.டி. நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10, 12- ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ , ஐடிஐ , செவிலியர் , மருந்தாளுநர் படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

  • 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
  • வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

  காங்கயம்:

  காங்கயம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தான கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வீரராக வராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

  இதில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பல்லடம் வட்டம் மின்வாரியத் துறை சார்பில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து முதல் நிலை கூட்டம் நடைபெற்றது.

  அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு வேலைவாய்ப்பு முகாமிலும் 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 8,782 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர். இதுவரையில் தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அனைத்து துறைகளும் ஆயத்தப் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். அந்த வகையில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் எஸ்.பொன்னுசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஏ.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என அரசு செயலாளர் கூறினார்.
  • இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

  விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட விவரம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி கள் மேற்கொள்ள வேண்டும்மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability Identity Card) வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வங்கிகளில் தொழில்கடன் பெறவும், அவர்களுக்கு இருப்பிடத்திற்கு அரு கிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்தி ட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

  முன்னதாக, சிவகாசி, சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளிக்கு சென்று, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

  18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மற்றும் அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார். தசைபயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • 10, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
  • தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

  ராணிப்பேட்டை:

  தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

  அதனடிப்படையில் இந்த மாதத்தில் வருகிற 10-ந் தேதி, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளனர்.