ஓமன்நாட்டில் பணிபுரிய டிப்ளமோ ஐ.டி.ஐ. படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்- வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் தகவல்

விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஓமன்நாட்டில் பணிபுரிய டிப்ளமோ ஐ.டி.ஐ. படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்- வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் தகவல்
Published on

சென்னை:

அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டில்கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள 22 முதல் 26 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் உடை மேல் உள்வர்கள் மற்றும் 165 செமீக்கு மேல் உயரமுள்ள டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்த ஆண் பணியாளர்கள், தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35,000 முதல் 39,000 மற்றும் விசா, உணவு, இருப்பிடம் விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுபவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in வலைதளம், தொலைபேசி எண்கள் (044-22505886/22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண்.(9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com