search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடக்கம்
    X

    சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்ட போது எடுத்த படம்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடக்கம்

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி மையம்

    பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து

    கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்கல்வி

    பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    Next Story
    ×