என் மலர்
நீங்கள் தேடியது "IAS Academy"
- மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
- இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.
இந்த அகாடமியில் படித்தவர்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவரும் முன்பதிவு செய்து, இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற முன்பதிவுக்கு 'PG -TRB MODEL QUESTION PAPER-2025' என்று டைப் செய்து தங்களது 'SUBJECT' மற்றும் முகவரியுடன் 9176055568 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 9176055576, 9176055578 என்கிற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கரன் (வயது45).

இவருக்கும் மனைவிக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் அண்ணாநகரில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து விட்டு இரவில் வீட்டுக்கு சென்றார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சங்கர் மனம் வெறுத்து வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் துணையுடன் சங்கர் உடலை இறக்கி அருகில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து மனைவியும் 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.
அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தி வந்த சங்கரன் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை கூறுவார்.
குறுகிய காலத்தில் புகழ் பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று மத்திய- மாநில அரசு பணிகளில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாக உள்ளனர். இப்போது 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இவரது மையத்தில் படித்து வருகின்றனர்.
அவரது பயிற்சி மையத்தில் படித்த கருணாகரன் கூறியதாவது:-
எங்கள் பயிற்சி மைய இயக்குனர் சங்கரன் தென்னிந்திய அளவில் எத்தனையோ அதிகாரிகளை உருவாக்கியவர்.
பணம் இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வந்தார். அவர் ஒரு பயிற்சியாளராக இல்லாமல் அனைவரிடமும் நண்பராக பழகியவர்.
தமிழக மாணவர்கள் ஒவ்வொருவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வர வேண்டும் என்பதில் தீராத ஆசை கொண்டவர். அவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் ஒரு சிலரைதான் காண முடியும். அப்படிப்பட்டவரை இழந்தது எங்களுக்கு பெரும் துயரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #IASAcademy #ShankarSuicide
சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர்.
கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.
நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும்.
முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.






