search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் ரூ.3.70 கோடி மதிப்பில் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் திறப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
    X

    திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற காட்சி. அருகில் ராஜா எம்.எல்.ஏ.

    தென்காசி மாவட்டத்தில் ரூ.3.70 கோடி மதிப்பில் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் திறப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

    • மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது.
    • ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும்.

    ஆலங்குளம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 2021-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 2021-22 நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடம், கரிவல ம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார கட்டிடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலக் கடையநல்லூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலப்பாவூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம், பொட்டல்புதூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கான மருந்துகளை எப்போதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும் என்றார்.

    தொடர்ந்து பெண்க ளுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருள்கள் வழங்கினார். முன்னதாக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் மருதபுரத்தில் சிறப்பாக அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்பு பஸ் நிலையத்தில் கழக கொடி யினை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வாணன், ஒப்பந்த தாரர் கணேஷ் பாண்டியன், மருத்துவர்கள் தண்டாயு தபாணி, குத்தால ராஜ், தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, மாவட்ட நலக்கல்வி யாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் மற்றும் செவிலி யர்கள், மருத்துவ பணியா ளர்கள், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, அன்பழகன், சீனிதுரை , சிவன் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். வட்டரா மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    Next Story
    ×