search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.8 லட்சத்தில் புதிய  அங்கன்வாடி மைய கட்டிடம்  திறப்பு விழா
    X

    திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    Next Story
    ×