search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    • நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார்.
    • குழந்தை ரியாக்‌ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக சட்டங்களை கடுமையாக்கி வரும் அரசுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றன.

    இந்நிலையில் சுமார் 3 வயது பெண் குழந்தைக்கு நல்ல விதமாக தொடுவது மற்றும் தவறான முறையில் தொடுவது குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார். அதற்கேற்ப அந்த குழந்தை ரியாக்ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த குழந்தையின் பெற்றோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

    • தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

    இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • நாமக்கல்லில் 2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் 2 குழந்தை களின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.

    கல்லூரி மாணவி

    நாமக்கல் தாதம்பட்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் மேனகா (வயது 18). இவர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.

    கடந்த 15-ந் தேதி கல்லூ ரிக்கு சென்ற மேனகா, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சந்திரகுமார் நாமக்கல் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    2 குழந்தைகளின் தாய்

    இதேபோல், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி சிவப்பிரகாசம் நாமக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த னர். ஆனால் மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உற வினர் வீடுகளில் தேடினார். ஆனால் ஜெயந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
    • விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.

    அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.

    சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.

    இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.

    நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கயம் :

     காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

    • தாயை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை, நடுத்தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது50). இவரது மகன் மாதவன் (25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் முழுமையாக குணமாக வில்லை.

    இந்தநிலையில் சாந்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதவன் பணம் கேட்டுள் ளார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்து விட்டார். இதில் ஆத்திர மடைந்த மாதவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து சாந்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    • 2 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.
    • சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாண்டி. இவரது மனைவி கலைமலர் (வயது23). இவர்களது 2 வயது மகன் அருள்கருப்பு. கடந்த 31-ந் தேதி அருள்கருப்புடன் வெளியே சென்ற கலைமலர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையா?
    • தக்கலையில் இன்று காலை பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இன்று காலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷைஜாராணி (வயது 42), அவரது மகள் ஆதிரா (8) மற்றும் பத்மலதா(55), பிரியா (45), சாந்தா (65) ஆகியோர் பஸ்சில் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மண்டைக்காடு செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷைஜாராணி கையில் யாரோ பிளேடால் கீறி உள்ளனர். இதனால் அவர் வலியால் கத்தினார்.

    மேலும் அவரது மகள் ஆதிராவுக்கும் அதேபோல் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்படவே, பஸ்சை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிக்பாக்கெட் திருடர்கள் யாராவது, பேக்கை கிழிக்கும் போது தாய்-மகள் கைகளை தெரியாமல் கிழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பஸ்சில் வந்த ஓருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஷைஜாராணி, அவரது மகள் ஆதிரா சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    • காப்பகத்தில் ஒப்படைப்பு
    • ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.

    கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • சுசிந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோயல் (வயது 35). இவர் வங்கியில் தினசரி கலெக்சன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றார். இவர் மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி ஜெர்லின் (27), மகள் ஜெர்சிகா (9), ஆகியோரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் ஜோயல் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த தாய், மகள் காணாதது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      கன்னியாகுமரி:

      வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

      இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளது.

      இந்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

      இது குறித்து மகளிர் சப் - இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி சிறுமியை கொடுமைப்ப டுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

      தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ×