search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கை"

    • . இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது
    • அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால்

    நாகர்கோவில் : பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாமுவேல் (வயது 50), லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால் மனைவி சொரூபராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த ஜெஸ்டின் சாமுவேல் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் அருகே விஷ மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சொரூபராணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
    • காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • சுசிந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோயல் (வயது 35). இவர் வங்கியில் தினசரி கலெக்சன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றார். இவர் மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி ஜெர்லின் (27), மகள் ஜெர்சிகா (9), ஆகியோரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் ஜோயல் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த தாய், மகள் காணாதது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.
    • தனது மனைவி நகைகளை கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தகவல்

    நாகர்கோவில்:

    பறக்கை அருகே உள்ள சி. டி. எம். புரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 50). இவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி சரஸ்வதியிடம் நகைகளை கேட்டு சரஸ்வதி கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் உறவினர் மற்றும் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சரஸ்வதி இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.

    • கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
    • இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார்

    கன்னியாகுமரி:

    நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுடலைகோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி அபிஷா (வயது 21). இவர் பறக்கையில் உள்ள ஒரு பாங்கியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று மாலை அபி ஷாவை அழைத்துச் செல்வதற்காக, தினேஷ் குமார் காரில் பறக்கை வந்தார். அவர் வடக்கு செட்டிதெரு பகுதியில் காத்திருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்ற பறக்கை மணிகண்டன் (37) அங்கு வந்தார்.

    அவர், தினேஷ்குமாரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு கார் சாவியை எடுத்ததோடு அபிஷாவை அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. மேலும் இதனை தட்டிக் கேட்ட சுசீந்திரம் அருகே உள்ள தேரூரை சேர்ந்த இந்திரகுமார் (36) என்ப வரை மணிகண்டன் அரிவா ளால் தலையில் வெட்டி உள்ளார்.

    படுகாயம் அடைந்த இந்திரகுமார் சுசீந்திரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அபிஷாவின் உறவினருடைய காரை மணிகண்டன் எடுத்துச் சென்றதாகவும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் அபிஷா புகார்செய்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் விசாரணை நடத்தி மணி கண்டன் என்ற பறக்கை மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிகண்டன் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறக்கை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் பறக்கைப் பகுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பறக்கை அருகே உள்ள மாவிளை காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் பறக்கை மாவிளை காலணியை சேர்ந்த அர்ஜூன் (வயது 18) என்பதும், மற்றொருவன் பறக்கை செட்டி தெருவை சேர்ந்த சத்தியா (18) என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×