பறக்கை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது

கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார்
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுடலைகோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி அபிஷா (வயது 21). இவர் பறக்கையில் உள்ள ஒரு பாங்கியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை அபி ஷாவை அழைத்துச் செல்வதற்காக, தினேஷ் குமார் காரில் பறக்கை வந்தார். அவர் வடக்கு செட்டிதெரு பகுதியில் காத்திருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்ற பறக்கை மணிகண்டன் (37) அங்கு வந்தார்.

அவர், தினேஷ்குமாரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு கார் சாவியை எடுத்ததோடு அபிஷாவை அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. மேலும் இதனை தட்டிக் கேட்ட சுசீந்திரம் அருகே உள்ள தேரூரை சேர்ந்த இந்திரகுமார் (36) என்ப வரை மணிகண்டன் அரிவா ளால் தலையில் வெட்டி உள்ளார்.

படுகாயம் அடைந்த இந்திரகுமார் சுசீந்திரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அபிஷாவின் உறவினருடைய காரை மணிகண்டன் எடுத்துச் சென்றதாகவும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் அபிஷா புகார்செய்தார்.

புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் விசாரணை நடத்தி மணி கண்டன் என்ற பறக்கை மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டன் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com