என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரிசியன்"

    • புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.
    • தனது மனைவி நகைகளை கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தகவல்

    நாகர்கோவில்:

    பறக்கை அருகே உள்ள சி. டி. எம். புரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 50). இவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி சரஸ்வதியிடம் நகைகளை கேட்டு சரஸ்வதி கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் உறவினர் மற்றும் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சரஸ்வதி இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.

    • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ,சிவன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுதிகிருஷ்ணன் (வயது 60), எலக்ட்ரீசியன்.

    இவர் கடந்த 1-ந் தேதி மதியம் நாகர்கோவிலில் இருந்து வில்லுக்குறி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்கான்கடை அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த சுதி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர் கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுதிகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்தார். சம்பவம் குறித்து அவரது உறவினர் ஆறுமுகம் (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×