நாமக்கல்லில்2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயம்

நாமக்கல்லில் 2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள். நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்லில்2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல்லில் 2 குழந்தை களின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.

கல்லூரி மாணவி

நாமக்கல் தாதம்பட்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் மேனகா (வயது 18). இவர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.

கடந்த 15-ந் தேதி கல்லூ ரிக்கு சென்ற மேனகா, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து சந்திரகுமார் நாமக்கல் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

2 குழந்தைகளின் தாய்

இதேபோல், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி சிவப்பிரகாசம் நாமக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த னர். ஆனால் மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உற வினர் வீடுகளில் தேடினார். ஆனால் ஜெயந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com