search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சம்"

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தஞ்சமடைந்தார்.
    • அவரது மகன் சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகநகர் பகுதியில் வசித்து வருபவர் அன்னம்மாள். இவரது கணவர் குப்பன் கடந்த 2020-ம் ஆண்டு உயிரி ழந்தார். இவர்களுக்கு குற்றாலராஜா, சரவண பாண்டி என 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது மகன்சரவண பாண்டி பெற்றோரின் சொத்துக்களான வீடுடன் கூடிய 2 சென்ட் இடத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த மகன் குற்றால ராஜா தனக்கு மீதமுள்ள சொத்துக்களை தருமாறு தாய் அன்னம்மாளிடம் கேட்டு ெதாந்தரவு செய்துள்ளார்.

    இதனால் விரக்தியடைந்த அன்னம்மாள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார். சொத்துக் களை பெற்றுக்கொண்டு மகன்கள் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தாய் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்த மகன் குற்றால ராஜா அங்கு வந்து அன்னம்மாளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்
    • போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தி பெற்றோரை காவல் நிலையம் வரவைத்தனர்

    கோவை,

    பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் யதுகிருஷ்ணன் (வயது 25). இவர் தனியார் லாட்ஜியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கன்னித்தமிழ் (26). கல்லூரி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். அவர்கள் கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் படி கன்னித்தமிழ் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் யதுகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜோதி நகர் விநாயகர் கோவில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.

    பின்னர் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோரை போலீசார் பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

    இதேபோல ஆனைமலை அருகே சித்தூரை சேர்ந்த வர் தினேஷ் குமார் (26). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 2 ½ வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, காங்கயம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    ஒரேநாளில் பொள்ளாச்சி, ஆனைமலை போலீஸ்நிலையங்களில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியாக அனுப்பி வைத்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காளியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் கபிலன் (வயது 23). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் தினக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் ஆனந்தி (19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.

    ஆனந்தி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திடீரென்று கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் கபிலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆனந்தி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கபிலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். நீண்ட நேரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.இருப்பினும் பேச்சுவார்த்தையில் கபிலனின் பெற்றோர் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உதவியுடன் வந்திருந்தவர்களிடம் அறிவுரை கூறி இருவரும் சேர்ந்து வாழ அறுவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட கபிலன், ஆனந்தி இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்துடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் இருவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஆனந்தியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது போலீசார் தெரிவித்தனர்.

    • 3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்க்கும் பார்வதி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் சென்னிமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    அதே போல் சென்னிமலை அருகே முகாசி பிடாரியூர் ஊராட்சியை சேர்ந்த மனோஜ் (29) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பணி புரியும் கோபிநாதன் (25) என்பவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்த திவ்யதர்ஷினி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் இந்த திருமணத்தை ஏற்று கொண்ட பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீனா (21) ஆகியோர் ஒரே இடத்தில் வேலை செய்த போது காதல் ஏற்பட்டது.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    பின்னர் இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 நாட்களில் சென்னிமலை போலீசில் 4 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம்
    • இருதரப்பு வீட்டாரிடமும் போலீசார் சமரசம்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நல்லண்டார் கொல்லையை சேர்ந்த அழகர் மகன் வீரமணி (வயது 27)) இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக் கோட்டை சேர்ந்த பழனிவேல் மகள் சினேகாவும் (வயது 19) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள திரும ணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு ப ாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.

    • ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி. (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி விட்டதாக ஆலங்குடி போலீசில் தந்தை புகார் கொடுத்தார். ஆலங்குடி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் லெனின் என்பவரும் ஜோஸ் ஆஸ்லியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு காதல் ஜோடியை அழைத்து சென்றனர். பெண் வீட்டார் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொண்டனர்.

    • ரோஜாப் பூ-பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறினர்.
    • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    கோவை

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டா–டப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் இருப்பதால் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக நீலகிரிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இன்று காலை காதலர்கள் ஒருவருக்கொ ருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவரு–க்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.தொடர்ந்து பூங்காவில் அடுக்கி வைத்திருந்த மலர் செடிகளை பார்வையிட்டு, அதன்முன்பு ஜோடியாக நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி காதல் பரிசாக ரோஜாப்பூ, பரிசு பொரு–ட்களையும் வழங்கினர்.

    தொட்ட பெட்டா மலை–சிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ேபான்ற சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வா லாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.அவர்கள் தங்களுக்குள் வாழ்த்து க்களை கூறி கொண்டு பல்வேறு பரிசு–பொருட்க–ளையும் பகிர்ந்து கொண்ட–னர். சில கா தல் ஜோடிகள் குளக்க ரையில் அமர்ந்து காதல் பரிசாக அன்பு முத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதேபோல் உக்கடம் பெரிய குளம், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம் பகுதிக–ளிலும் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.காதலர் தினத்தை–யொட்டி மலர் விற்ப னை நிலை யங்கள், கிப்ட் ஷாப்புக–ளிலும் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான காதல் ஜோடிகள் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

    காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இரு க்கவும், அதே சமயம் பல்வே று அ மை– ப்புகளை சேர்ந்த வ ர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊட்டி மற்றும் கோவையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்க–ளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டிருந்தது. 

    • தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
    • அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.

    அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.

    ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.

    • போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேசினர்.
    • திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த சரல்விளையைச் சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மகள் அஸ்வினி (வயது 18).

    இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி அஸ்வினி வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை

    இதனைத் தொடர்ந்து அய்யப்பன் தனது மகளை பல இடங்களிலும் தேடி னார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினி நேற்று ஒரு வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வினு (21) என்றும் தாங்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அஸ்வினி தெரிவித்தார்.

    மேலும் தனக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பா டுகள் செய்யப்பட்டதாக வும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினுவை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து போலீசார், இரு தரப்பி னரையும் வரவழைத்து பேசி னர்.

    • பெற்றோர் மூலம் எனது காதல் திருமணத்துக்கும் எதிர்ப்பு உள்ளது.
    • பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    காதல் திருமணம் செய்து கொண்ட சுவேதா, தனது கணவர் அருணாச் சலத்துடன் தருமபுரி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த நான், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., வேதியியல், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும், பெரியாம்பட்டியை சேர்ந்த அருணாச்சலத்துக்கும், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இதையறிந்து எனது பெற்றோர், வேறு ஒருவருடன் என்னை திருமணம் செய்து வைக்க முயன்றனர்.

    இதையடுத்த வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம், தருமபுரி மாவட்டம் கொல்லாபுரி மாரியம்மன் கோவிலில், அருணாச்சலத்துக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எனது பெற்றோர் மூலம் எனது காதல் திருமணத்துக்கும் எதிர்ப்பு உள்ளது.

    இதனால், எனது பெற்றோரால் எங்களுக்கும், அருணாச்சலத்தின் குடும்பத்தினரின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனது பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

    இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.

    இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
    • சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×