காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம் இருதரப்பு வீட்டாரிடமும் போலீசார் சமரசம்
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

ஆலங்குடி.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நல்லண்டார் கொல்லையை சேர்ந்த அழகர் மகன் வீரமணி (வயது 27)) இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக் கோட்டை சேர்ந்த பழனிவேல் மகள் சினேகாவும் (வயது 19) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள திரும ணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு ப ாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com