என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்
- பெற்றோர் மூலம் எனது காதல் திருமணத்துக்கும் எதிர்ப்பு உள்ளது.
- பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தருமபுரி,
காதல் திருமணம் செய்து கொண்ட சுவேதா, தனது கணவர் அருணாச் சலத்துடன் தருமபுரி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த நான், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., வேதியியல், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும், பெரியாம்பட்டியை சேர்ந்த அருணாச்சலத்துக்கும், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதையறிந்து எனது பெற்றோர், வேறு ஒருவருடன் என்னை திருமணம் செய்து வைக்க முயன்றனர்.
இதையடுத்த வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம், தருமபுரி மாவட்டம் கொல்லாபுரி மாரியம்மன் கோவிலில், அருணாச்சலத்துக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எனது பெற்றோர் மூலம் எனது காதல் திருமணத்துக்கும் எதிர்ப்பு உள்ளது.
இதனால், எனது பெற்றோரால் எங்களுக்கும், அருணாச்சலத்தின் குடும்பத்தினரின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனது பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






