ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர் இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர்
ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி. (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி விட்டதாக ஆலங்குடி போலீசில் தந்தை புகார் கொடுத்தார். ஆலங்குடி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் லெனின் என்பவரும் ஜோஸ் ஆஸ்லியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு காதல் ஜோடியை அழைத்து சென்றனர். பெண் வீட்டார் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com