search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகராறு"

    • விழாவில ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.
    • தடுக்க வந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை கொள்ளைக்காடு பகுதியை சேர்ந்த நான்கு நபர்களாக ஒன்று சேர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மொய் விருந்தோடு, காதணி விழாவும் நடத்தியுள்ளனர்.

    மொய் விருந்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    இந்நிலையில், மொய் விருந்தில் சாப்பிட வந்த நெய்வேலியை சேர்ந்த ஆறுமுகம் (வயது26), குமரேசன்,(27), இருவரும் கூடுதலாக ஆட்டுக்கறி கேட்டு தகராறு செய்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

    இருப்பினும் ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த நாற்காலியை துாக்கி வீசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது,

    அங்கிருந்த வேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளர்.

    ஆனால், ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த கல்லால் சுரேஷை தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்க வந்த சிலரையும் கண் மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் சுரேஷின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் மொய் விருந்து நடத்தியவர்கள் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில், போலீசார் ஆறுமுகம், குமரேசன், இருவரையும் நேற்று கைது செய்தனர் மொய் விருந்து நிகழ்ச்சியில் இரண்டு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

    • சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சேகர் (வயது20). தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் முத்தப்பா மகன் மல்லேஷ் (32). கட்டிட மேஸ்திரி.

    இந்த நிலையில் சானபள்ளியில் நடந்த ஒரு காத்துகுத்தும் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு மல்லேஷ், சேகரிடம் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறினார்.

    அதற்கு சேகர் வாங்கி வர மறுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அந்த தகராறு கைகலப்பாக மாறியதில், சேகரை, மல்லேஷ் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பீர்பாட்டிலால் சேகரை தாக்கினார்.

    இதில் பலத்த காயமடைந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.
    • புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள நவலெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 60). இவரது மனைவி சக்திகனி (57), இவர்களுக்கு சத்தியநாராயணன் (37), சத்தியகிருஷ்ணன் (28) என்ற 2 மகன்களும், சக்திகனி (30) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்களுக்கும், பாஸ்கர் மனைவி சக்திகனியின் தம்பிகளுக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கர் வீட்டிற்கு வந்த சக்திகனியின் தம்பி தனசேகர் (49), அவரது மனைவி சக்திபாமா மற்றொரு தம்பியான குணசேகரன் மனைவி பாக்கியலெட்சுமி, மற்றொரு தம்பியான சக்திவேல் மனைவி தங்கம் ஆகிய 4 பேரும் பாஸ்கர் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பான புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை தனசேகரை கைது செய்தனர்.

    தொடர்ந்து, சக்திபாமா பாக்கியலெட்சுமி, தங்கம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பவுன்ராஜ் ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (வயது 26), இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தில் தற்கொலை செய்து கொண்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
    • மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் ரங்கன் தெருவை சேர்ந்தவர் பதம்சந்த் (60).அதே பகுதியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் மதுராந்தகம் மண்டபத் தெரு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்திய ஏலச்சீட்டில் பணம் கட்டிவந்தார்.

    ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பலர் பணம் சரிவரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதில் நகைக் கடை உரிமையாளர் பதம்சந்த்தும் ஏலச்சீட்டு பாக்கித்தொகை செலுத்த வேண்டும் என்று ஆனந்தின் சகோதரர் பாபு, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறி வந்தனர். ஆனால் பதம்சந்த் ஏலச்சீட்டு பணம் முழுவதும் தான் கட்டிவிட்டதாக கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபு ஆகியோர் ஏலச்சீட்டு பணம் தொடர்பாக நகைக்கடையில் இருந்த பதம்சந்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நகைக்கடை உரிமையாளரை தாக்கும் காட்சி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபுவை தேடிவருகிறார்கள்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

    இதில் மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், நிர்மலா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரி வித்த னர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • விஜயன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவ ருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத் தன்று மாதேஷ் வீட்டிற்கு விஜயன் உட்பட 5 பேர் நேரில் சென்று சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அதனை தடுக்க வந்த அவரது தாய் சந்திராவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த மாதேஷ், செந்தில்வேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்வேல், நடராஜன், கலை, சரவணன், விஜயன் ஆகிய 5 பேரும், செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், குமரன், சந்திரா என மொத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
    • அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

    நேற்று மாலை கடற்கரை கோவில் நடைபாதையில் கடை வைப்பதில் இவருக்கும் திருக்கழுக்குன்றம் கொத்தி மங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் பெண் நதியா (33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வினி தனது கையில் வைத்து இருந்த கத்தியால் நதியாவின் தோள்பட்டை, வயிறு, கை உள்ளிட்ட பகுதியில் குத்தி கிழித்தார். இதில் நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான அஸ்வினி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது.
    • அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர்.

    குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (28). பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது. இதனை அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அர்ஜுனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

    மேலும் அவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினர். இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜுன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் அவரது மனைவி ராஜி ஆகியோரை கைது செய்தனர்.

    • 2 தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வர வேண்டுமென கூறி அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ் நேற்று புறப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால், இந்த பஸ் மாற்று பாதையில் சென்றது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பஸ் நேற்று மாலை பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி அருகில் சென்றது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ், கள்ளக்குறிச்சி பஸ்சின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், தனியார் பஸ் ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், பயணிகளை இறக்கிவிட்டு பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வரவேண்டுமென கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து இன்று காலை 2 தனியார் பஸ் ஊழியர்கள் பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாதென எச்சரித்து அனுப்பினார்கள்.

    • வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த வர்கள் அரவிந்தன் (வயது 19), இவரது நண்பர்கள் கோகுலகிருஷ்ணன் (19), சாய் பூசன் (19).

    இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் பிரம்மதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வெம்பாக்கம் பொம்மாத்தான் கோவில் அருகே புத்தனூரை சேர்ந்த மோகன் (37), சரவணன் (45), ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை மோகனம், சரவணனும் வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் வாலிபர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அரவிந்தனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பாபு என்பவர் என் வாலிபர்களை தாக்குகிறாய் என்று கூறி தகராறு தடுத்து நிறுத்தி உள்ளார்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த அரவிந்தனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

    இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன், சரவணனை கைது செய்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×