search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barbed wire"

    • சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • மின் விபத்தில் வனவிலங்குகள் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான உயரங்களில் இருந்த மின் கம்பங்களின் உயரங்கள் 30 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் கடந்த மாதம் ஊருக்குள் நுழைந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த யானை வனத்திற்குள் செல்லும்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் மின் கம்பம் முறிந்து யானை மீது விழுந்தது. அப்போது, மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதைத்தொடர்ந்து அரசு சார்பில் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிக்க அறிவுறுத்தியது.

    கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை மண்டல மின்பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் வினோதன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் வனத்தையொட்டிய பகுதிகள் மற்றும் மலை அடிவாரப்பகுதிகள், யானை வழித்தடங்களில் மின் விபத்தில் வனவிலங்குகள் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மின் பகிர்மானம் வட்டத்தை சேர்ந்த மதுக்கரை, எட்டி மடை, மாவுத்தம்பதி, புரவிபாளையம் ஆகிய வனச்சரகங்களில் யானை வழித்தடங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளில் யானைகளை மின் விபத்தில் இருந்து காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, தாழ்வான உயரங்களில் இருந்த மின் கம்பங்களின் உயரங்கள் 30 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் மின்வாரிய ஊழியர்களுடன் வனத்துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இது குறித்து தெற்கு மேற்பார்வை பொறியாளர் குப்புராணி கூறுகையில், "மதுக்கரை, எட்டிமடை, மாவுத்தம்பதி, புரவிபா ளையம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வாக செல்லும் மின் பாதைகளில் 48 பகுதிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

    தவிர, யானை வழிகளில் உள்ள 83 மின் கம்பங்களுக்கு முள் கம்பி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 75 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. 36 மின் கம்பங்களை உயர்த்தி உள்ளோம். பழுதடைந்த நிலையில் இருந்த 15 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.

    ×