search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோல்"

    • பண்டித நேருவிடம் தம்பிரான் சுவாமிகள் செங்கோலை வழங்கினார்.
    • செங்கோல் நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக பொய், போலி என்கிறார்கள்.

    சென்னை:

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது.

    பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள்.

    நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகள்பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது என தெரிவித்தார்.

    • 1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார்.
    • 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    சென்னை:

    ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு 1947-ம் வருடம் சுதந்திரம் கிடைத்து நேரு பிரதமராக பதவியேற்றபோது அவரது கையில் செங்கோல் ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது. அந்த செங்கோலை சென்னையைச் சேர்ந்த உம்மி பங்காரு சகோதரர்கள் உம்மி டி. எத்திராஜ், உம்மிடி சுதாகர் ஆகியோர் செய்தனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த செங்கோல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமரால் வைக்கப்படுகிறது. இந்த விழாவில் சென்னையில் இருந்து உம்முடி சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் டெல்லி சென்று கலந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து தியாகராய நகரில் உள்ள அவர்களது கடையில் உம்மிடி சுதாகர் அவரது மகன் பாலாஜி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார். மூன்றாம் தலைமுறையான நானும் எனது சகோதரன் மற்றும் 12 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டோம்.

    அவர்கள் கூறிய டிசைனில் இதை தயார் செய்தோம் செய்து முடிக்க ஒரு மாதம் ஆனது. முழுக்க முழுக்க கைத்தொழிலாகவே இதை செய்தோம். மெஷின் பயன்படுத்த விடவில்லை. அப்போது அதன் மதிப்பு ரூ.15,000 ஆகும். இப்போது மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இந்த செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் இருந்ததை கண்டுபிடிப்பதற்கு 4 மாதங்கள் ஆனது.

    75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    இந்த பெருமைமிக்க விழாவில் எங்கள் குடும்பத்தினர் 15 பேர் பங்கேற்கிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மிகப்பெரிய ஒரு வரலாற்றை இந்த சம்பவம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    எங்களது நிறுவனத்தின் சார்பில் பல செங்கோல்களை செய்துள்ளோம். ஆனால் இதில் கிடைத்த பெருமை கவுரவம் எங்களுக்கு வேறு இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை.
    • சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை. சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களின் நடத்தையை காட்டுகிறது. நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை காங்கிரஸ் ஊன்று கோலாக்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வரும் 28-ந் தேதி சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதை முன்னிட்டு அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த செங்கோலை கங்கை புனித நீரால் புனிதப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மேலும் அந்த செங்கோலை தயாரித்தவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    • திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது.
    • பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய பாரம்பரிய நெறிமுறைகளுடன் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு கேட்க, ஜவஹர்லால் நேரு. மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசனை நடத்தினார். சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார்.

    மேலும், ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு 'தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். குருமகா சன்னிதானம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத் தினம் பிள்ளையையும் டெல்லிக்கு தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.

    சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட் டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீன கர்த்தரான குரு மகாசன்னிதானத்தைப் பார்த்து, அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க. 'கோளறு பதிகம் பாடுக' என்று சன்னிதானம் கட்டளையிட்டார்.

    1947 ஆகஸ்ட் 14-ம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றார். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து 'ஓதுவா மூர்த்தி, வேயுறு தோளிபங் கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்று முழுமையாகப் பாடி ஆசிர்வதித்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்.

    திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. தமிழில் 'கோள்' என்றால் கிரகம்: 'அறு' என்றால் நீக்குவது. 'கோளறு' என்றால் கிரகங்களின் தீய விளைவுகளை அழித்தல். 'பதிகம்' என்பது பொதுவாக 10 பாடல்களைக் கொண்ட சிவபெருமானை போற்றும் பாடலாகும்.

    பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது. கடவுளின் சக்தி பெறப்படுவதைக் காட்டும்விதமாக 1661-ம் ஆண்டு 2-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக பிரிட்டன் ராணியின் சாவரின் ஆர்ப் உருவாக்கப்பட்டது. 363 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இப்படி பல்வேறு நாடுகளின் ஆட்சி அடையாள சின்னம் குறித்தும், சோழ பேரரசு குறித்த தகவல்களும் மத்திய அரசின் விளக்கக்காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர்.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் 14-ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட திருவா வடுதுறை ஆதீனம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடி, முதல்பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலே அடையா ளப்படுத்தியது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுதந்திர தின வாழத்துகளை கூறினார்.

    திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கான செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரவுவிடமிருந்து பெற்று நேருவிடம் அளித்தபோது செங்கோல் வைத்துக்கொண்டு நேரு வுடன் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்கிற குமாரசாமி தம்பிரான் எடுத்துக்கொண்ட புகைப்பட கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆதீனம் சார்பில் 1500 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடியை ஆதீனம் முன்னிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் கைகளில் உயர்த்தி பிடித்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கமிட்டு ஊர்வலமாக சென்றது காண்போருக்கு சுதந்திரத்தின் பெருமையை அடையாளப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×