search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார நிலையம்"

    • 2 செவிலியர்கள் மட்டுமே ஆஸ்பத்திரியில் பணிபுரிகின்றனர்:
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர், :

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 11 கிராமங்கள் உள்ளது.

    இந்த 11 கிராமத்தில் 4500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் இரவு நேரங்களில் விஷத்தன்மை உள்ள பாம்பு கடி மற்றும் அவசர முதலுதவி போன்ற தேவைகளுக்கு அரசு அக்கரை செங்கப்பள்ளியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை நம்பி இருக்கின்றனர்

    ஆனால் அரசு துணை சுகாதார நிலையத்தில் பகல் நேரத்தில் கூட ஆட்கள் இருப்பதில்லை. பகலிலேயே ஆஸ்பத்திரி பூட்டி வைக்கப்பட்டு ள்ளதுஇதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    அரசு துணை சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆனால் அவர்களும் துணை சுகாதார நிலையத்திற்கு வருவது மிகவும் அரிதானது.

    பாதி நாட்களில் பகல் நேரங்களிலேயே துணை சுகாதார நிலையம் பூட்டி தான் கிடக்கிறது.

    மேலும் செவிலியர் இரவு நேரத்தில் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கு என்று ஆஸ்பத்திரியுடன் கூடிய விடுதியும் உள்ளது. ஆனால் செவிலியர்கள் யாரும் இங்கு தங்குவதில்லை.

    இதனால் இரவு நேரங்களில் ஏதேனும் முதல் உதவி ஏற்பட்டால் இங்கிருந்து 12 கி.மீட்டர் தூரமுடைய அன்னூர், சிறுமுகை, அல்லது புளியம்பட்டி பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் உயிர் சேதம் கூட ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    எங்களுக்கு 24 மணி நேரமும் பணியில் இருக்கும் செவிலியர்கள் தேவை என்று கிராம சபை கூட்டத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பலமுறை கூறினோம்.ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே எங்கள்பகுதியில் செயல்படும் மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.

    ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.

    எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    • தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொண்டியைச்சுற்றிலும் நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம மக்கள் அனைவரும் சிகிச்சைக்காக தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் வருகின்றனர். அது மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் இந்த மருத்துவமனை உள்ளதால், இந்த சாலையில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களையும் சிகிச்சைக்காக இங்குதான் கொண்டு வரப்படுகின்ற னர். ஆனால் இந்த மருத்துவ மனையில் உயரிய மருத்துவ வசதி இல்லை. இதனால் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை மட்டும்தான் இங்கு செய்ய முடிகிறது. மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பலர் வழியிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படு கிறது.

    இதனை கருத்தில் கொண்டு தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு புகார் மனு அனுப்பி இருந்தேன். அந்த மனுவின் அடிப்படையில் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயணபிராசத் ஆகி யோர் முன்பு இன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரி வித்தார்.

    இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை அரசு ஏற்றுக் கொண்டு, தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கில் மேல் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

    • ராமநாதபுரம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பயன்பாட்டுக்கு வராததால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    புதிய கட்டிடத்திற்கான பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழக்கரை அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரையமும், மன உளைச்சலும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் சென்று வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பணத்தை செலவழிக்க வேண்டிய உள்ளதால் வேதனை அடைந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மக்கள் சங்கமம் என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடத்த திட்டமிட்டு 6-வது நிகழ்ச்சியாக மக்கள் சங்கமம் மாநாடு கூரியூர் ஜின்னா திடலில் நடந்தது.

    மாநாட்டு குழு தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருவாடானை தலைவர் ஹமீது இப்ராஹிம் வரவேற்றார். நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமீரா பானு, தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகு அபுல் ஹசன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் கைசர், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில பொதுச் செயலாளர் அர்ஷத் அஹமது அல்தாபி ஆகியோர் பேசினர்.

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இபுராஹிம், மாவட்ட செயலாளர்கள் சேக் தாவூது, ராஜிக் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன், தேவிபட்டினம் நகர் தலைவர் ஜலாலுதீன், தொகுதி இனணச் செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்தனர்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேவிபட்டினம் மக்கள் சங்கமம் குழு உறுப்பினர் அபுதாஹிர் நன்றி கூறினார்.

    தேவிபட்டினத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து மீட்பு சிகிச்சை பிரிவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடு க்கவும், மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடல் அட்டையின் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நஜீமுதின், வண்ணாங்குண்டு நகர் நிர்வாகிகள் அர்சாத், அல் நவ்பர், லாபிர் அலி, அசாருதீன், சபீக் அலி, அசன், சரீப், அல் பாசிம், சுஹைல், ஜீபைர், பஹத் ஆகியோர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

    அதில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பதற்கு தாமதம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்கள் பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவசர கால சிகிச்சை மேற்கொள்வதற்கும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

    கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

    • டெங்கு காய்ச்சல் பற்றியும், பரவும் விதம் பற்றியும் அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துக்கூறினார்.
    • யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று பயனடையவும் அறிவுறுத்தினார்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வரகூர் உயர்நிலைப்பள்ளியில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமை யில் நடந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் பற்றியும், பரவும் விதம், பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி, காய்ச்சல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும் அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துக்கூறினார். மேலும், யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று பயனடையவும் அறிவுறுத்தினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவ ர்களுக்கு எடுத்துரைத்தனர். நிறைவில் மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து க்கொண்டார்கள்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இதேப்தபோல் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.

    கோடியக்கரை ஊராட்சியில் ரூ. 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறக்கபட்டது.

    நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×