search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Sub-Health Center"

    • 2 செவிலியர்கள் மட்டுமே ஆஸ்பத்திரியில் பணிபுரிகின்றனர்:
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர், :

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 11 கிராமங்கள் உள்ளது.

    இந்த 11 கிராமத்தில் 4500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் இரவு நேரங்களில் விஷத்தன்மை உள்ள பாம்பு கடி மற்றும் அவசர முதலுதவி போன்ற தேவைகளுக்கு அரசு அக்கரை செங்கப்பள்ளியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை நம்பி இருக்கின்றனர்

    ஆனால் அரசு துணை சுகாதார நிலையத்தில் பகல் நேரத்தில் கூட ஆட்கள் இருப்பதில்லை. பகலிலேயே ஆஸ்பத்திரி பூட்டி வைக்கப்பட்டு ள்ளதுஇதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    அரசு துணை சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆனால் அவர்களும் துணை சுகாதார நிலையத்திற்கு வருவது மிகவும் அரிதானது.

    பாதி நாட்களில் பகல் நேரங்களிலேயே துணை சுகாதார நிலையம் பூட்டி தான் கிடக்கிறது.

    மேலும் செவிலியர் இரவு நேரத்தில் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கு என்று ஆஸ்பத்திரியுடன் கூடிய விடுதியும் உள்ளது. ஆனால் செவிலியர்கள் யாரும் இங்கு தங்குவதில்லை.

    இதனால் இரவு நேரங்களில் ஏதேனும் முதல் உதவி ஏற்பட்டால் இங்கிருந்து 12 கி.மீட்டர் தூரமுடைய அன்னூர், சிறுமுகை, அல்லது புளியம்பட்டி பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் உயிர் சேதம் கூட ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    எங்களுக்கு 24 மணி நேரமும் பணியில் இருக்கும் செவிலியர்கள் தேவை என்று கிராம சபை கூட்டத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பலமுறை கூறினோம்.ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே எங்கள்பகுதியில் செயல்படும் மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×