search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A primary"

    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.

    ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.

    எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    ×