search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயன்பாட்டுக்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
    X

    பயன்பாட்டுக்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்

    • ராமநாதபுரம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பயன்பாட்டுக்கு வராததால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    புதிய கட்டிடத்திற்கான பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழக்கரை அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரையமும், மன உளைச்சலும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் சென்று வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பணத்தை செலவழிக்க வேண்டிய உள்ளதால் வேதனை அடைந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×